உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கன்னிமாடம்

ரூஸென்ட் ஒணோரேயிலுள்ள 'தாய்மைக் கன்னி மாடம்' எல்லாவகையிலும் பெருமாட்டி பிளான்ஸியின் மனத்துக்கேற்ற தாயிருந்தது. கண்டிப்பு முறைபற்றிய அவள் குறிக்கோளுக்கு அது நிறைவளிப்பதாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டிலுள்ள கன்னி மாடங்கள் பெரும் பாலும் பயிற்சிக்காக வரும் பிள்ளை களை நாகரிக மக்கட்குழுவுக்கேற்ற புதுமையிற் பழக்குபவையாக இருந்தன. ஆனால், இக்கன்னிமாடம் பயிற்சிப் பிள்ளைகளையும் கன்னித் துறவிகளைப்போலவே கட்டுப்பாட்டுடன் பயிற்று வித்தது. பிள்ளைகளின் நாள்முறை வாழ்வில் ஒழுங்கு முறைகள் - சமய ஆசாரங்கள் - ஒழுக்க அமைதிகள் - தண்டனைகள் - அடக்கு முறைகள். இவைகளில்லாத வேளை கிடையாது; இக்கசப்ப வியலுக்கான கசப்புத் தாளிதமாயிருந்தது அவர்கள் கல்வி.

மடத்தின் அன்னை லாரைனிடம் மிகவும் அன்புடைய வளாகவே இருந்தாள். ஆனால், பயிற்சித் துறைப் பொறுப்புத் தாங்கிய தமக்கை இம்பீரியா, அவளிடம் அழுக்காறு கொண்டு கொடுமைகள் செய்து வந்தாள். இம்பீரியாவுக்கு முப்பது ஆண்டு இருக்கும். பதினான்காவது ஆண்டில் அவளுக்கு அம்மை நோய் கண்டு முகமெல்லாம் தழும்புபட்டது. அவள் மணவாழ்வு இதனால் தடைப்பட்டுப் போயிற்று. அது முதல் அவள் கன்னி மாடப் பணியில் தன் கவர்ச்சியற்ற வாழ்வைக் கழிக்கத் துணிந்தாள். ஆனால், இன்ப ஆர்வத்தில் அவளுக்கேற்பட்ட ஏமாற்றம் அவளைக் கொடியவளாகவும் கல்நெஞ்சுடைய வளாகவும் மாற்றிற்று. குறிப்பாக லாரைன் போன்ற அழகு நங்கைகளைக் கண்டால் அவளுக்குப் பிடிப்பதில்லை. இயற்கை யிலேயே எப்போதும் கடுகடுப்பாயிருந்த அவள் முகம் லாரைனையோ அவளுடன் சிரித்து விளையாடும் பிள்ளை களையோ கண்டால் கடுஞ் சீற்றங்கொண்டது. லாரைனின்