உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

23

அழகிலும் குணத்திலும் ஈடுபட்டு அவளிடம் பற்றுடைய வராகவோ மதிப்புடையவராகவோ காணப்பட்ட எல்லார் மீதும் அவள் எரிந்து விழுந்தாள்.

கன்னிமாடங்களில் விருப்பு வெறுப்பைக் காட்டவும் கொடுமை செய்யவும் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. லாரைன் மீதே கண் வைத்திருந்தத இம்பீரியா அவள் ஒவ்வொரு செயலிலும் குற்றங்கண்டாள். அவள் வாளா இருந்தால் படிக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு. சிரித்தால் ஒழுக்க முறைபற்றிய சொற்பொழிவு. விளையாட்டு நேரத்தில் வேலைகள் கொடுக்கப்படும். வெளியே போயிருந்தால் எங்கே, எதற்கு, யாருடன் என்ற குறுக்குக் கேள்விகள். இவற்றினிடையில் லாரைன் வாழ்வு அலைக்கழி வுற்றது.

லாரைன் அறிவு மந்தமுற்ற தமக்கையை எப்போதும் நிழல் போலத் தொடர்ந்து குறும்புப் பிள்ளைகளின் தொல்லைகளி லிருந்து பாதுகாத்து வந்தாள். அவளை யாராவது துன்புறுத் தினால், தங்கையைக் காக்கும் உடன்பிறந்த ஆண்மகன் போல அவள் போராடி அவளைக் காப்பாள். லீமா மீது லாரைன் இப்படி உயிராயிருப்பது கண்ட இம்பீரியா அவளைப் புண் படுத்தும் எண்ணத்துடனே லீமாவை வைத்து கொடுமைப் படுத்தினாள். லீமாவைப் பாதுகாக்க விடாமல், அவளை வேறு இடத்தில் ஏதாவது சாக்குப் போக்குடன் அனுப்பிக் கொண்டே யிருப்பாள்.

லாரைன்மீது இம்பீரியாவின் கொடுமைகளைக் கவனித்து அன்னை அவளிடம் தனிக் கனிவு காட்டி அவளுக்காகப் பரிந்து பேச முனைவாள். இதனால் இம்பீரியாவின் பகைமையும் பொறாமையும் இன்னும் மிகுதியாயிற்று.லாரைனிடம் எல்லாரும் பரிவுகொள்வதற்கு அவள் அழகு மட்டுமின்றி, குணமும் காரணம் என்பதை அறிந்து இம்பீரியா அவளைப் பற்றிய நல்லெண்ணத்தைக் கெடுக்கவும் வழி தேடினாள். சிறப்பாக அன்னைக்கு அவள் பேரில் கெட்ட எண்ணம் உண்டாக்க அவள் சூழ்ச்சி செய்தாள்.

அன்னை அருமையாக வளர்த்த ஒரு பூனையிடம் மடத்தின் சிறுவர் சிறுமியர் அனைவருமே வெறுப்புக் கொண்டிருந்தனர்.