உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அப்பாத்துரையம் - 30

ஒருநாள் இம்பீரியா, லாரைனின் பெயர் பொறித்த அவளது கோப்பையை அதன் வாயில் கட்டிவிட்டாள். பூனை செல்லுமிட மெல்லாம் கோப்பை இழுபட்டு ஓசையுண்டாயிற்று. அது கேட்டுக் கலவரமடைந்த பூனை மேன்மேலும் ஆடியோடி அதை உதறித்தள்ள முயன்றது. சிறுவர் சிறுமியர் கைகொட்டி ஆரவாரம் செய்து அதனுடன் ஓடி அதைத் துன்புறுத்தலாயினர்.

இம்பீரியா இதனைத் தானே சென்று அன்னையிடம்

கூறினாள். இக்குறும்பு செய்தது லாரைன்தான் என்பதைத் தெளிவுபடுத்தக் கோப்பையையும் எடுத்துக்காட்டினாள். இதனால் அன்னைக்கு லாரைன் மீது கடுஞ்சினம் ஏற்பட்டது; அத்துடன் இம்பீரியாவே அன்னையிடம் லாரைனுக்கு இன்ன வகையான தண்டனை தரவேண்டும் என்று கூறி அவளிடமிருந்து அதற்கான கட்டளை பிறப்பித்தாள். அத்தண்டனைலாரைனுக்குப் பொறுக்க முடியாத வேதனை தந்தது. ஏனெனில், அத்தண்டனை வேறு எதுவுமன்று; அவள் அருமை நாய்க் குட்டியை அவளிட மிருந்து அப்புறப்படுத்துவதே.

66

இம்பீரியாவுடன் இக் குறும்பில் பல சிறுவர், பல நங்கையர்கள் ஈடுபட்டனர். லாரைன் ரோஸியை எண்ணி எண்ணி இரவு பகல் தூங்க வில்லை; ஒழுங்காக உண்ண உடுக்கவில்லை. குறும்பர்கள் அவள் துன்பங்கண்டு வேடிக்கை பார்த்துக் களித்தனர். இரண்டு, மூன்று நாள் சென்றும் ரோஸியைக் காணாமல் லாரைன் என் ரோஸி எங்கே? அது எப்படி யிருக்கிறது?” என்று எல்லாரையும் கேட்கத் தொடங்கினாள். இறுதியில் ரோஸியை இம்பீரியா தோட்டக்காரனிடம் ஒப்படைத்திருந்தாள் என்று நையாண்டிகளுக்கிடையே ரோஸியை அனைவரும் சேர்ந்து கறிவைத்துத் தின்றுவிட்டனர் என்ற தெரிவித்தான்.

தன் பற்றுதல்கள் அத்தனையையும் ஒருங்கே இணைத்து ரோஸியின் மீதே வைத்திருந்தாள் லாரைன். அதற்குச் செய்யப் பட்டகொடுமையைக் கேட்ட அவள், ‘ஆ!' என்று கூறி அப்படியே கல்லாய்ச் சமைந்திருந்தாள். அத்துயரமே அவள் களிப்பை யெல்லாம் போக்கி, அவளுக்குக் கடுநோயாயிற்று. நாட்கணக்காக அவள் படுக்கையில் கிடந்து வதங்கினாள்.