உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

25

பாரிஸ் மக்கள் நாயிடம் மிகுதி பற்றுடையவர்கள். மிகப் பெரிய குடும்பத்தினர்கூட நாய் வளர்ப்பவர்களைக் காண நெடுந் தொலை சொல்லக் கூச மாட்டார்கள். நாயிடம் பற்றுடையவர் களிடம் எல்லாரும் நேசங்காட்டினர். நாய் வளர்ப்பு அத்தகைய கலையாயிருந்தது. லாரைன் வளர்த்த அந்த அழகிய சிறு நாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி பெரிய குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் கன்னிமாடத்துக்கு வருவதுண்டு. ரோஸிக்கு ழைக்கப்பட்ட கொடுமை, ரோஸியிடம் லாரைன் காட்டிய பாசம், அதன் முடிவால் அவளுக்கேற்பட்ட நோய் ஆகிய இச் செய்திகள் நாய் வளர்ப்புக் கலையன்பர் உலகில் ஒரு புதிய எழுச்சியூட்டிற்று. ரோஸியை யிழந்து ஆற்றாது தவிக்கும் இக்கலை நக்கையைக் கண்டு துயர் விசாரிக்கவும், ஆறுதல் தரவும், வேறு தக்க நாயைப் பரிசளிக்கவும் நாள்தோறும் பாரிஸ் நகரின் செல்வர், நங்கையர் வந்த வண்ணமாயிருந்தனர். அவர்களை வரவேற்கும் பொறுப்பை அன்னை இம்பீரியாவிடமே ஒப்படைத்தாள். அது அவள் செய்த செயலுக்கேற்ற நல்ல தண்டனையாயிற்று. ஏனெனில், அவள் ஓயாது வாசலிலிருந்து காத்து வரவேண்டியதாயிற்று. அவள் அருவருப்பான உருவையும் கொடுங் குணத்தையும் எப்போதுமே எல்லாரும் வெறுத்தனர். இப்போது நாய்க்கு அவள் தீமை இழைத்த பின் நாய்க் கலையன்பருக்கு அவள் ஒரு பேய்மகளாகவே காட்சியளித்தாள். அவள் வரவேற்புக்கு எங்கும் கிண்டலும் வசையும் அவமதிப்புமே எதிர் பரிசாகக் கிடைத்தன.

இம்பீரியா தன் புதிய அவமதிப்புக்களுக்கேற்ப, லாரைனிடம் புதுப் பகைமை கொண்டு புதுப் பழிகள் நாடினாள்! ஆனால், அன்னை இப்போது அவளிடம் தனிச் சிறப்பான சலுகை காட்டி வந்தாள். அவள் லாரைனிடம் கொண்ட மதிப்பைக் கொடுக்கப் புதுவகை கண்டாலன்றி, அவள் மீது வஞ்சந் தீர்க்க வழி இல்லை. மடத்தின் மாணவ மாணவிகள் வாரத்தில் ஒரு நாள் தாய் தந்தையருக்குக் கடிதம் எழுத இணக்கம் அளிக்கப் பெற்றனர். லாரைனுக்குத் தந்தையிடம் இருந்த பற்று இம்பீரியாவுக்குத் தெரியும். தந்தைக்குக் கடிதம் எழுத முடியாதபடி செய்தால் அவள் மனம் வருந்துவாள் என்றும் அவள் கண்டாள். ஆகவே சிறுபிள்ளைகள் கடிதம் எழுத உதவும்படி அவர்களுக்கு வழக்கப்படி மாதிரிக் கடிதப் படிவங்கள் வழங்கும்போது