உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

||-

அப்பாத்துரையம் - 30

அவளுக்கு மட்டும் வழங்காது விட்டாள். லாரைன் மீண்டும் மீண்டும் கேட்டும் அவ்வாரம் அவளுக்கு அதன் படிவம் கிட்ட வில்லை.

கடிதம் எழுதுவதிலேயே கருத்தாயிருந்த லாரைன் மாதிரிக் கடிதம் எங்காவது கிடைக்காதா என்று மடத்து நூல் நிலையத்தில் சென்று புத்தகங்களைப் புரட்டினாள். மாது தேமாந்திஞி எழுதிய கடிதங்களின் தொகுதி ஒன்று அங்கே இருந்தது. முன்னுரையிலேயே அம்மாது "பேசுவது போல் எழுதுக. கடிதம் எழுதச் சிறந்த வழி இதுவே" என்று அதில் கண்டிருந்தது.மேற்போக்காக ஒன்றிரண்டு கடிதங்களை வாசித்த போது, இவ்வறிவுரைப்படியே அவள் பேச்சுப் போக்கில்தான் எழுதியிருந்தது தெரியவந்தது. தந்தைக்கு எழுதும் ஆர்வத்தால் தூண்டப் பெற்று லாரைன் தன் மனத்திலுள்ள உணர்ச்சிகளை யெல்லாம் எப்படியோ கடிதத்தில் கொட்டி எழுதலானாள்.

தந்தையின் எதிர்கடிதம் அவளை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.“என் அருமை லாரைன்! உன் கடிதம் காண மகிழ்ச்சி. நீ இவ்வளவு நல்ல கடிதம் எழுதக்கூடும் என்று நான் கனவிலும் கருதவில்லை. மடத்துப் பயிற்சியும் முன்மாதிரியும் உனக்கு எவ்வளவு கைத்திறம் தந்திருக்கிறது என்று காண நான் பெரிதும் உவகையடைகிறேன். இப்படியே நீ முன்னேறினால் உன் எதிர்காலம் என் நம்பிக்கைக்கும் மீறியதாயிருக்கும் என்பது உறுதி. உன் அன்பான நல உசாவுதல்களுக்கு நான் தரும் மறுமொழி இங்கே யாவரும் நலம் என்பதும் உன் நலத்தில் யாவரும் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதுமே” என்று தந்தை எழுதியிருந்தார்.

துணையின்றித் தானே எழுதிய கடிதநடை மடத்திற்குப் பெருமையும் தந்தைக்கு மனநிறைவும் தந்து விட்டன.லாரைனின் உள்ளத்தில் கருக் கொண்டிருந்த எழுத்தாண்மைத் திறம் இம்முதற் பாராட்டினால் ஊக்கம் பெற்று அரும்பவிழத் தொடங்கிற்று.

இம்பீரியா போன்ற கன்னித்துறவியரின் கொடுமை யிடையே ஃபிரான்சு நாட்டின் ஒரு நல்ல கடித எழுத்தாண்மைக் கலைஞர் கலை எழுந்து அலைபாயத் தொடங்கியது. விரைவில் மடத்தின் முன்மாதிரி கடந்து லாரைனின் பெரோனின் கடித