உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

27

முன் மாதிரி மடத்திலும் வெளியிலும் புகழப்பட்டது. இம்பீரியா மீண்டும் ஏமாற்றமும் கசப்பும் அடைந்தாள்.

தந்தைக்கு எழுதுவதுடன் நில்லாமல் லாரைன் தன் பழைய பள்ளித்தோழியர்களுக்கும் உறவினர்க்கும் எழுதத் தொடங்கினாள். அவள் உள்ளார்ந்த அன்புக் கனிவார்வமும், அவள் குழந்தை யுள்ளத்தின் கனவார்வங்களும் படிப்படியாக இனிய ஃபிரெஞ்சு மொழி உரைநடையாகி சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின. அவள் தன் நேரத்தின் பெரும் பகுதியையும் கடிதமெழுதிக் கழித்தாள். நாட்டின் புதிய வாசகர் பலர் இப் புத்திலக்கியதைத் தேடிப்படித்து மகிழ்ந்தனர்.

தமக்கை இம்பீரியா அக்கடிதங்களின் புகழ் வளராது தடுக்கப் பலவகையிலும் முயன்றாள். பல கடிதங்களை அவள் எழுதும் மேடையறையிலிருந்து சேகரித்து, மற்றப் பிள்ளைகள் நையாண்டி செய்யும்படி வாசித்துக்காட்டமுனைந்தாள்.வாசிக்கத் தொடங்கு முன் ஓவிய வகுப்பின் மணியடிக்கவே, அவள் அதை லாரைனின் தலையணியினுள் திணித்து அனுப்பினாள். ஓவிய வகுப்பில் தலையணி நழுவி விடக் கடிதங்கள் சிதறின. ஆசிரியர் அவற்றுட் சிலவற்றை எடுத்துப் படித்தார். அது அவள் கடிதம் என்றும் கேட்டு அவர் அவற்றை எல்லாப் பிள்ளைகளின் முன்னும் பாராட்டினார். இம்பீரியா ஏளனம் செய்யத் தொடங்கிய கடிதங்களின் புகழ் அவள் சுவையறிவற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுவதாயமைந்தது.

நகரின் பல செல்வச் சீமாட்டிகளும் நங்கையர்களும் புதிய எழுத்துக் கலைஞரை வந்து பாராட்டினர்.

லாரைனுடன் கடிதம் எழுதுங் கலையில் ஈடுபட்டு அவள் புகழைப் பங்கிட்ட நங்கை மதாம் மரீலி, திடுமெனக் கன்னி மாடத்திலிருந்து தன் மணவினை குறித்து விலகினாள். அவள் பாரிஸின் முதல் தர உயர் குடியில் மணந்து கோமாட்டி சார்விஸ் லாரி ஆயினாள். அவள் வாழ்க்கைப் படி விரைவில் உச்ச நிலையடைந்தது. அவள் அரசன், அரசியுடன் அடிக்கடி உலாவச் சென்று மன்னவையின் மங்கையர் ஒளி விளக்கங்களுள் ஓர் ஒளி விளக்கமானாள். அவள் தன் பழைய தோழியரனைவரும் தம் பழைய தோழி வெளியுலகில் இவ்வளவு உயர்வடைந்தது கண்டு