உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

||-

அப்பாத்துரையம் - 30

மகிழ்வும் மலைப்பும் உடையவராய், அவளைச் சூழ்ந்து மொய்த்தனர்.ரோஸியை இழந்ததன் பின் லாரைன் அதனிடமாக வேறு எந்த நாயையும் பரிசாக பின் லாரைன் அதனிடமாக வேறு எந்த நாயையும் பரிசாக ஏற்ப மறுத்து, ரோஸியையே நினைத்து மனமாழ்கினாள். ஆயினும் நாளடைவில் அவள் தேறுதலடைந்து பள்ளி நடவடிக்கைகளில் அக்கடை செலுத்தத் தொங்கினாள்.

மரீலி கோமாட்டி (சார்விஸ் லாரி) லாரைனுடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சு ரூஸோ பற்றி எழுந்தது, ரூஸோவின் புதிய கருத்துகளில் அப்போது புத்தார்வம் பரவி வந்தது. பெண்கள் உலகில் அவர் நூல்கள் மிகவும் விருவிருப்பூட்டி வந்தன. ஆயினும் பழம் போக்காளர் களிடையிலும் ரூசென்ட் தேணொரே கன்னிமாடம் போன்ற இடங்களிலும் புதுப்புனைவுகள் பொதுவாகவும், ரூஸோவின் புனைகதைகள் சிறப்பாகவும் கண்டித் தொதுக்கப் பெற்றிருந்தன. மரீலி ரூஸோபற்றி மிகுதி ஆர்வங் காட்டினாள். லாரைனுக்கும் அவள் அவரது 'எமிலி'யின் ஒரு சுவடி கொடுத்தாள். லாரைன் அதைப் பிறருக்குத் தெரியாமல் தன் உட்பையில் மறைத்து வைத்துக்கொண்டாள்.

தனிமாடம் சார்ந்து லாரைன் ‘எமிலி' யைத் திறந்து வாசிக்க முனைந்தாள்.ஆனால் முதல் வரியிலேயே, “இந்தப் புனை கதையை வாசிக்கத் துணியும் எந்த இளநங்கையும் தன் குடி மதிப்பை இழந்து விடுவாள்” என்ற வாசகம் அவள் கண்ணிற் பட்டது; இதுகண்டு அஞ்சி லாரைன் உடனே புத்தகத்தை மூடிவிட்டாள்.

தன் குடிமதிப்பு இதற்குள்ளாகப் போயிருக்குமோ என்று அவள் சிறிது அஞ்சினாள்!

இங்ஙனம் மூன்று ஆண்டுகள் சென்றன. கன்னிமாடப் பயிற்சி முடிவடைந்தது. அவள் மீண்டும் தமக்கையுடன் பாட்டியின் வீடு வந்து சேர்ந்தாள்.