உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

9

"நான் வீட்டைப் பார்ப்பேனா? குழந்தைகளைப் பார்ப்பேனா? வேலையைப் பார்ப்பேனா? ஆண் பிள்ளையா யிருந்தும் நீங்கள் இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே? நான் இப்படி நெடுநாள் இருக்கப் போவதில்லை. நான் இறந்தால் குழந்தைகள் என்ன செய்யும் என்றுதான் கவலைப்படுகிறேன்!” என்று அவள் பொருமினாள்.

மதியன் உள்ளத்தின் ஆழத்தில் அவள் சொற்கள் பதிந்தன. மாமன் இறந்ததுமுதல் கேட்பாரற்றுக்கிடந்த ஒரு கோணிப்பையை அவன் எடுத்துக் கொண்டான். அதில் ஒரு கைக் கோடாரி, வாய்ச்சி, உளி, சுத்தி, சீவுளி முதலிய கருவிகள் இருந்தன. அவற்றுடன் அவன் காடு நோக்கிச் சென்றான். மாலை அவனுக்குக் கட்டுச்சோறு கட்டித் தந்தாள்.

காட்டின் உட்புறத்தில் ஒரு திறந்த வெளி இருந்தது. அதில் ஒரு சிறு மடமும், சின்னஞ்சிறு சுனையும் இருந்தன. சுனையருகே பார்க்க அழகற்ற, ஆனால் ஒரு மரம் இருந்தது. அதன் மீது ‘மயன்’ என்ற பெயர் செதுக்கப் பட்டிருப்பதை அவன் கண்டான்.

புகழ் மிக்க தன் மாமன் பெயர் அதில் யாரால், எப்போது, எதற்காகப் பொறிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்தான். கருவிப் பையைத் தலைப்பக்கம் வைத்து அவன் சிறிது சாய்ந்தான். எப்போது அவன் கண்ணயர்ந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. ஆயினும் கண் மூடிய பின்னும் அவன் அகக்கண் மூடவில்லை. அது மயனிருந்த காலத்தைப் பற்றியும், அவன் வேலைப்பாடு பற்றியும் கனவு கண்டது.

அவன் கண்முன் மயன்வந்து நின்று, புன்முறுவலுடன், "மாலை எப்படி இருக்கிறாள்? குழந்தைகள் நலந்தானா?" என்று

கேட்டான்.

கனவிலேயே அவன், “ஆம், ஆனால், என் சோம்பேறித் தனத்தால் தான்” என்று தன் கதையைத் தொடங்கினான்.

ஆனால், மாமன் அவனைப் பேசவிடவில்லை.“அஃதெல்லாம் ஒன்றுமில்லை. மாப்பிள்ளை; உங்கள் கைத்திறம் உங்களுக்குத் தெரியாது;அதுகிடக்கட்டும்; மாலையை நான் நலம் வினவியதாகக் கூறுங்கள்; பிள்ளைகளுக்கு என் பெயர் சொல்லி முத்தம் கொடுங்கள்; இன்றைய ஒரு நாள் வேலையை நான் உங்களுக்காகச்