உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 33

செய்து விடுகிறேன். அதன்பின் மாலைக்குக் கவலை வேண்டாம். நீங்கள் சற்றுநேரம் தூங்குங்கள்” என்றான்.

தூக்கத்தில் கனவு கண்ட மதியன், கனவிலேயே மீண்டும் தூங்கினான்.

தூக்கத்திலும் மரம் வெட்டும் அரவம் கேட்டது. சீவும் ஓசை, தட்டும் ஓசை தொடர்ந்தன.

அவன் அதன்பின் எதுவும் கேட்கவில்லை. ஆழ்ந்து அயர்ந்து தூங்கினான். அவன் தூங்கி விழித்தான். கனவு முடிந்துவிட்டதா அல்லது கனவிலேயே விழித்தானா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவன் தன் கண்முன் கண்ட காட்சியை நம்ப முடிய வில்லை. மயன் கைத்திறன் முழுவதும் காட்டும் வகையில் ஓர் அழகிய கட்டில் அவன் முன் கிடந்தது.

அவன் மரத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். மரம் இருந்த தடத்தையே காணவில்லை. கட்டிலும் கட்டிலுக்கு அருகே குவிந்து கிடந்த சில துண்டு துணுக்குகளும்தான் அதன் கதையை ஒருவாறு தெரிவித்தன. அருகே மயன் நின்றிருந்தான். அவனை மதியன் உற்று நோக்கினான்.

மயன் தன் கைவேலையின் வெற்றியை எண்ணியோ, மாலையை எண்ணியோ முகமலர்ச்சியுடன் காணப்பட்டான். கலை நிறைந்த மதிபோல அவன் முகம் ஒளி வீசிற்று.

மாமனிடம் பேச மதியன் வாயெடுத்தான்.பேச முடியவில்லை; அத்துடன் தன் முன் நிற்பது மயன்தானா, அல்லது தன் மயக்கத்தால் ஏற்பட்ட உருவெளித் தோற்றம் தானா என்று தயங்கினான். அவன் தயங்கத் தயங்க, அந்த ஒளி உருவம் மங்கி மங்கி அப்பால் சென்றது. தொலைசெல்லும்தோறும் அது மாலைவானில் மங்கித் தோன்றும் மதியம் போல மாறுபட்டு மறைந்தது.

அவன் கண்விழித்தான். இன்னும் கனவு காண்கிறோமா அல்லது நனவுலகில் விழித்து விட்டோமா என்று தயங்கிக் கொண்டே அவன் கண்விழித்தான்.

அவன் வியப்பு அடங்கவில்லை. அஃது இன்னும் பன்மடங் காயிற்று.ஏனென்றால், அவன் கனவில் கண்ட கட்டில் இப்போது