உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

11

அவன் முன்னிலையிலேயே கிடந்தது. அத்துடன் உறங்கப் போகும்போது கண்ட மரத்தையும் காணவில்லை. கனவில் கண்ட மரத்தின் துண்டுத் துணுக்குகள்கூடக் கிடந்த இடத்திலேயே கிடந்தன. “ஆம்! மாலை மதியமாக மறைந்த அவன் மாமன் முகம், மாலை மதியமாகவே அவன் கண்முன் காட்சியளித்தது!”

அதுமட்டுமன்று, உறங்கும்போது மதியமாயிருந்தது. இப்போது மாலையாயிற்று! அவன் மனம் நனவுலகின் எல்லையில், கனவுலகின் விளிம்பில் ஊசலாடிற்று. அவன் சுனையில் மீண்டும் நீராடி, மாமனிருந்த திக்குநோக்கி நன்றியறிதலுடன் தெண்டனிட்டான். பின் கட்டிலுடன் வீடு வந்து சேர்ந்தான்.

கட்டிலின்

குதித்தாடினாள்.

66

மாயாவனப்பைக்

கண்டு மாலை

‘ஆ, என் தந்தை செய்த கட்டில் போலவே இருக்கிறதே. இவ்வளவு நல்ல வேலைத் திறத்தை வைத்துக் கொண்டுதானா, இவ்வளவு நாள் என்னை வதைத்தீர்கள்?" என்றாள் அவள். அவன் ஒன்றும் பேசவில்லை.

பின், “இந்தக் கட்டில் சோறு போட்டுவிடாது. இதை எங்கே கொண்டுபோய் விற்கலாம் என்று எண்ண மிடுகிறேன்” என்றான் அவன்.

"நம் மன்னன் பேகனைத் தவிர இதை வாங்கத் தக்கவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? அவரிடமே கொண்டு கொடுங்கள்” என்றாள்.

"பேகனிடம் பொருள்பெற இந்தக் கட்டிலா வேண்டும்? மயிலுக்குப் போர்வையும், முல்லைக்குத் தேரும் கொடுத்த மன்னன் நம் வறுமையைக் கண்டே கொடுத்துவிடக் கூடும். கட்டிலுக்கேற்ற விலையை வேறு இடம் தான் பார்க்க வேண்டும்" என்றான் மதியன்.

மன்னனை நீங்கள் அறிந்தது அவ்வளவு தான்! நாம் அவனிடம் இரக்க வேண்டாம் கட்டிலின் தகுதியறிந்து விலை கோரத்தான் போகிறோம். அவன் இரப்பார்க்குக் கொடுப்பது வேறு.பொருளுக்குத் தகுதியறிந்து தரும் விலை வேறு" என்றாள் மாலை. அவன் மனைவி.