உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

||-

இதற்கு

அப்பாத்துரையம் - 33

என்ன தகுதியென்று நமக்குத் தெரிய

வேண்டாமா?" என்று மதியன் கேட்டான்.

மனைவி மறுமொழி கூறுமுன் 'கணீர்' என்று எங்கிருந்தோ மறுமொழி வந்தது.

66

‘என் தகுதியை நான் அறிவேன். நானே எனக்குள்ள விலையைக் கூறுவேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்” என்று அந்தக் குரல் கூறிற்று, பேசியது கட்டில் தான்!

அதுகேட்டு அவர்கள் வியப்படைந்தார்கள்.

66

'இதை நானே அரண்மனைக்குக் கொண்டு போய்விலை பெற்று வருகிறேன்" என்று மாலை புறப்பட்டாள்.

மன்னன் பேகன் கொலுமுடிந்து உவளகத்தில் தன் மனைவி கண்ணகியுடன் வீற்றிருந்தான். அவன் முன் பாணர் பாடிக் கொண்டு இருந்தனர். விறலியர் ஆடிக் கொண்டு இருந்தனர்.

வாயில் கடந்து மாலை கட்டிலுடன் சென்றாள். அவள் முன்னிலையில் கட்டிலை வைத்துவிட்டு, அவள் ஒதுங்கி நின்றாள்.

பேகம் கட்டிலின் வனப்பைக் கண்டு திகைத்தான். “ஆ... மயன் மீண்டும் உயிர்பெற்று வந்துவிட்டானா? அல்லது இஃது அவன் இறக்குமுன் செய்து வைத்திருந்த ஒன்றா?” என்றான்.

மாலை, "அரசே! நான் மயனின் மகள் மாலை, இந்தக் கட்டில் என் கணவன் செய்தது. அவரும் என் தந்தைக்குத் தமக்கை மகன் தான். இதை விற்கக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றாள்.

"என்ன விலையானால் கொடுப்பாய், மாலை!" என்று கேட்டாள், அரசி கண்ணகி.

“கட்டிலே கூறும், அம்மணி!” என்றாள் மாலை.

"கட்டில் பேசுமா? இதேது?" என்று கூறி அரசன் வாய் மூடுமுன், கட்டில், "ஆம், அரசே! என் விலை ஐந்து மரக்கால் பொன்" என்றது.

பேகன் சிரித்து, "ஒரு கட்டிலுக்கு ஐந்து மரக்கால் பொன் யார் கொடுக்க முடியும்?” என்றான்.