உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

13

கண்ணகி பெருமிதத்துடன் காவலாளை நோக்கி, “ஆறு மரக்கால் பொன் கொடுத்துக் கட்டிலை வாங்கி அரசன் பள்ளிமாடம் சேர்ப்பி" என்றாள். மாலை களிப்புடன் வீடு சென்றாள்.

ரு

"கேட்ட விலைக்கு மேல் ஒரு மரக்கால் பொன் கொடுப்பானேன்” என்று மன்னன் அரசியிடம் கேட்டான்.

“அதையும் கட்டிலிடமே கேளுங்களேன்” என்று கூறிக் கண்ணகி மன்னனை அழைத்துச் சென்றாள். முன்னிரவில் மன்னன் புதிய கட்டிலில் அமரச் சென்றான்.

"வள்ளல் மன்னரே மயன் புகழ் மரபில் வந்த கட்டிலில் ஏற வேண்டுமானால் குளித்துத் துப்புரவான சிந்தனைகளுடன் வரவேண்டும்” என்றது கட்டில்.

“மன்னன் மரபைவிட மயன் மரபு சிறந்ததுதான் என்று தனக்குள் கூறிக் கொண்டே, மன்னன் சென்று நீராடிப் புத்தாடை அணிந்து, அறக் கடவுளை நினைந்து கட்டிலை அடைந்தான்.

66

சற்று நேரம் சென்றபின் அரசிவந்தாள். கட்டில் பேசிற்று; "மன்னனுக்கேற்ற ஒப்பனையுடன், உயர் சிந்தனையுடனும் வரவேண்டும், அம்மையீர்!” என்றது கட்டில்.

மயன் வகுத்த கட்டில் மன்னன் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் கட்டளையாகத் தொடங்கிற்று.

கட்டிலின் நடவடிக்கை முழுவதும்

று

அத்துடன்

முடியவில்லை. கட்டிலின் முதல்கால் வெளியே போயிற்று. முதல்யாம முடிவில் அது மற்ற மூன்று கால்களையும் நோக்கிப் பேசிற்று. "தோழர்களே! நான் நகரும் நாடும் சுற்றிவருகிறேன். நகரின் எல்லைப்புறத்தில் உணவு உடையில்லாமல் நூற்றுக்கணக்கானவர் நகரை நோக்கி வருகின்றனர். காலையில் அரசன் அவர்களுக்கு ஐம்பதாயிரம் கலம் நெல்லும் ஐம்பதாயிரம் பொன்னும் கொடுக்காவிட்டால், அவர்கள் கொள்ளைக்காரராக மாறக்கூடும்” என்றது.

இரண்டாம் யாமத்தில் இரண்டாம் கால் இதுபோலவே சுற்றிவந்து பேசிற்று. "தோழர்களே! நான் காடுகளைச் சுற்றிப் பார்வையிட்டு வருகிறேன். பன்றிகள் பெருக்கமுற்று நாட்டை