உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




((14) ||.

அப்பாத்துரையம் - 33

நோக்கி வருகின்றன. அரசன் காலையிலேயே சென்று அவற்றை வேட்டையாடா விட்டால், அவை நாட்டில் புகுந்து பயிர்களை அழித்து விடும்!” என்றது.

மூன்றாவது யாமத்தில் மூன்றாம் கால் இது போலப் பேசிற்று. "தோழர்களே! நான் வானமெங்கும் திரிந்து வருகிறேன். முகில் மண்டலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. வருகிற ஆண்டுகளில் மழை குறைந்து பஞ்சநிலை ஏற்படக் கூடும். இவ்வாண்டு உணவுப் பொருள்களை அரசன் சேகரம் செய்ய வில்லையானால், நாட்டின் செல்வத்துக்கு ஊறு உண்டாகும்" என்றது.

நான்காம் யாமத்தில் நான்காம் கால் பேசிற்று. "தோழர்களே! நான் கடலகமெங்கும் திரிந்து வருகிறேன். நடுக்கடலின் ஆழத்தில் புயல் கருக்கொண்டு வருகிறது. வருகிற ஆறு மாதங்களுக்கு நடுக்கடலில் செல்லும் கலங்கள்பெருத்த அழிவுகளுக்கு ஆளாகக் கூடும். கடல் கடந்து செல்லும் வணிகர் சில காலம் நடுக்கடலில் செல்லாமல் கடலோரமாகச் செல்லும்படி அரசன் ஆணை பிறப்பிக்காவிட்டால், வாணிகத் துறையில் சீர்கேடு ஏற்படும்” என்றது. கனவில் கேட்பது போல மன்னன் இத்தனையையும் கேட்டான்.

பொழுது

விடிந்தவுடனேயே

மன்னன் கால்களின் எச்சரிக்கைகள் அத்தனையையும் கவனித்து ஆவன செய்தான். அரசன் முன்னறிவின் திறன் கண்டு அமைச்சர்கள்கூட வியப்படைந்தனர்.

மன்னன் மாலையையும், மதியனையும் அழைத்து, ஆறு மரக்கால் பொன்னை அறுபது மரக்காலாக அவர்கட்கு அளந்து தந்தான். அச்சமயமும் அரசி கண்ணகி அவனை நயமாகக் கடிந்து கொண்டாள். "அன்பரே! ஐந்து கேட்டவர்களுக்கு நான் கேட்காமல் ஆறு கொடுத்தேன். நீங்களோ ஒன்றும் கேட்காதவர்களுக்கு அறுபது அளக்கிறீர்கள்” என்றாள்.

மன்னன், அரசியைத் தனியே அழைத்துக் கட்டிலின் மாய மதியுரைகளைக் கூறினான். மயன் புகழ்த்திருவுடன் போட்டி யிடும் பொருள்பெற்று மதியனும், மாலையும் வாழ்ந்தார்கள்.