உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. நீல ஒளி

நள்ளி என்றொரு மன்னன் இருந்தான். அவன் கொடாக் கஞ்சன், அத்துடன் தற்பெருமையும் உடையவன். அவன் மகள் வள்ளி செம்பவளம் போல அழகுடையவள். ஆனால், அவளும் தன் அழகுபற்றிச் செருக்குடையவளாயிருந்தாள்.

நள்ளியின் அரண்மனையில் நீலன் என்ற ஒரு வீரன் காவல் வேலை பார்த்து வந்தான், அவன் வாழ்நாள் முழுவதும் உண்மையாக உழைத்தான். அவனுக்கு ஊதியம் குறைவு, வேலையை விட்டுப் போகும்போதும் அரசன் அவனுக்கு ஒன்றும் காடுக்கவில்லை.

66

வள்ளியை நீலன் தூக்கி வளர்த்தவன். அவன் வேலையை விட்டு நீங்கும்போது அவள் பன்னிரண்டு வயதுச்சிறுமி. அவன் அவளைப் பார்த்து, "இளவரசி! எனக்கு ஏதாவது கொடுத்தனுப்பும் படி நீயாவது அப்பாவிடம் சொல்லு” என்றான். ஆனால், அவன் எதிர்பாரா வண்ணம் அச்சிறுமி, "போ, போ ஒரு வேலையும் செய்யாமல் அரண்மனை வாசலில் நின்றவன் தானே நீ! உனக்கு ஊதியம் தந்ததே தப்பு” என்றாள்.

தந்தையின் கடுமையைவிட அந்தச் சிறுமியின் ஈரமற்ற சொற்கள் அவன் உள்ளத்தை மிகுதியும் அறுத்தன.

நீலன் தன் துயரக் கதையைத் தன் இளமைந்தனிடம் கூறினான். அவன் பெயர் நேரி. அவன் மிகவும் மனம் வருந்தினான்.

“அப்பா! இந்த அரசனிடம் நீங்கள் இவ்வளவு நாள் வேலை பார்த்தது தப்பு. நான் இந்த அரசனிடமும் வேலைபார்க்கப் போவதில்லை. இந்த நாட்டிலும் இருக்கப் போவதில்லை. எங்காவது சென்று என் மதிப்பை உயர்த்துவேன். முடியுமானால், இந்த அரசனுக்கும் அவன் மகளுக்கும் நல்ல பாடமும் படிப்பிப்பேன். ஆகவே, எனக்கு விடை கொடுங்கள்” என்றான்.