உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

||-

அப்பாத்துரையம் - 33

கிழவனுக்குத் தன் இளமகனைவிட்டுப் பிரிய மனமில்லை. ஆனால், அவன் கூறியதிலும் உண்மை இருந்ததென்று கண்டான். ஆகவே, அன்பு ததும்பிய உள்ளத்துடன் விடை தந்தான்.

று

இளைஞன் நேரிக்கு இப்போது வயது பதினாறு. அவன் அச்சம் என்பது இன்னது என்றறியாத காளை, துன்பங்களை அவன் அந்தச் சிறு வயதிலேயே துரும்பு என்று கருதினான்.

அவன் காட்டில் நெடுந்தொலை சென்றான். நடந்து காலும் கையும் சோர்வுற்றது. கல்லும் முள்ளும் அவன் காலடிகளையும் உடலையும் புண்படுத்தின. இனி, நடக்க முடியாது என்ற நிலையில் அவன் ஒரு மங்கிய ஒளியைக் கண்டான். அதை நோக்கி நகர்ந்தான்.

அந்த ஒளி காட்டின் நடுவில் உள்ள ஒரு குடிலிலிருந்து வந்தது. அங்கே யாரும் இல்லை. ஒரு மாயக்காரக் கிழவி மட்டுமே இருந்தாள். அவள் இரக்கமற்றவள்; கொடியவள்; ஆனால், நேரியின் கள்ளமற்ற மென்முகங் கண்டு, அவள் கூட அவன் மீது இரக்கம் கொண்டாள்.

தன் குடிலுக்கு வந்தவர்களை இன்மொழிகளால் ல் வரவேற்று, நயவஞ்சகத்தால் கொல்வது அவள் வழக்கம். நேரியை அங்ஙனம் செய்ய மனமில்லாமல், கடுமொழிகள் கூறி. "இங்கே மில்லை, போ, போ," என்றாள்.

நேரி, "அம்மையே! என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது.நீங்கள் இந்த ஓர் இரவு தங்க இடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்" என்றான்.

அவள் ஒருவாறு ணங்கினாள். ஆனால், ஒரு கட்டுப்பாடுடனேதான் இணங்கினாள். “காலையில் எழுந்தவுடன் என் தோட்டம் முழுவதும் கிளறிவிட்ட பின்புதான் நீ போக வேண்டும்” என்றாள். இளைஞன் ஒத்துக் கொண்டான். இரவில் அவன் மாயக்காரியின் குடிலில் நன்றாகவே தூங்கினான்.

மறுநாள் காலையில் அவன் தோட்டத்துக்குச் சென்று மண்ணைக் கிளறத் தொடங்கினான். தோட்டம் மிகவும் பெரிய தாயிருந்தது.அதைக் கிளறி முடிக்க ஒரு முழுப் பகல் நேரமாயிற்று. அதன்பின் அவனால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.