உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

(17

அவன் மீண்டும் ஒருநாள் இரவு தங்க இடம் தரும்படி கிழவியிடம் கெஞ்சினான். கிழவி முதலில் மறுத்தாள். பின் 'மறுநாள் காலையில் ஒரு வண்டி நிறைய விறகு வெட்டிக் கொண்டு வர உறுதி தந்தால், தங்கலாம் என்றாள்.

மூன்றாம் நாளும் விறகு வெட்டி முடிய முன்னிரவாயிற்று. இப்போது அவன் முன்னிலும் பன்மடங்கு சோர்ந்து தளர்ச்சி யடைந்தான். மற்றும் ஓர் இரவு தங்க இடம் அளிக்கும்படி கெஞ்சினான்.

இத்தடவை கிழவி கொடுத்த வேலை அத்தனை கடுமையாகத் தோன்றவில்லை. காலையில் தோட்டத்திலுள்ள கிணற்றிலிறங்கி, அதனடியிலிருக்கும் நீல ஒளி விளக்கை எடுத்துத் தரவேண்டும் என்பதே அது.

நேரி இரவு அமைதியாக உறங்கினான். மறுநாள் கிழவி அவனைக் கிணற்றில் இறக்கினாள். அதில் தண்ணீர் இல்லை. ஆனால் அஃது அறுநூறு அடி ஆழமுடையதாயிருந்தது.போகப் போகப் புழுக்கம் மிகுதியாயிருந்தது. மூச்சும் முட்டிற்று. ஆனால், நேரி மூச்சடக்கிக் கொண்டு, உயிரைக் கையில் பிடித்த வண்ணம், கிணற்றின் அடித்தளத்தைச் சென்றடைந்தான். ஆங்கே இருந்த அழகிய நீல விளக்கை எடுத்துக் கொண்டு அவன் மேலே ஏறினான்.

கிணற்றின் கரையருகே அவன் வந்ததும், கிழவி விளக்கைப் பெறக் கையை நீட்டினாள். அதில் ஏதோ சூது இருக்கக் கூடும் என்று அவன் ஐயுற்றான். ஆகவே, “நான் முதலில் கரை ஏறி விடுகிறேன்; அதன்பின் தருகிறேன்” என்றான்.

கிழவிக்குச் சினத்தால் மூக்குச் சிவந்தது. அவள் திடுமெனக் கயிற்றோடு அவனைக் கிணற்றில் தள்ளினாள். அத்துடன் ஒரு பெரிய பாறாங்கல்லால் கிணற்றின் வாயையும் அடைத்தாள்.

நேரி கிணற்றில் அடைபட்டுத் தவித்தான்; ஓர் அரை நாழிகைக்குமேல் அதில் தான் உயிருடன் இருக்க முடியாது என்பதை அவன் கண்டான். சாகுமுன் இருந்த கொஞ்ச நேரத்தை அவன் அமைதியாகக் கழிக்க விரும்பினான். அவன் இறுதியாகத் தன் கடவுள் வழிபாட்டை முடித்தான்.சட்டைப் பையில் கையிட்டு அதில் தன் புகையிலைச் சுருளில் பாதி மீந்திருக்கக் கண்டான்.