உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 33

சிறிது புகை குடிக்க விரும்பி, சுருளின் நுனியை நீல ஒளியில் காட்டினான்.

ன்

திடுமென எங்கும் நீலப்புகை பரந்தது. அது ஒரு பெரிய நீலப் பூதமாக அவன் கண்முன் நின்று "என்னை ஏன் அழைத்தீர்கள், என் ஆண்டவரே!” என்றது. சிறிது அச்சத்துடன் நேரி, “நான் ஆண்டவரும் அல்ல. நான் உன்னை அழைக்கவு மில்லை" என்றான்.

"நீல ஒளியை வைத்திருப்பவர்கள் யாராயிருந்தாலும், எனக்கு ஆண்டவர்தாம்; நான் அவர்கள் அடிமை; ஒளியில் புகையிலைச் சுருள் காட்டினால், அதையே அழைப்பாகக் கொண்டு நான் வருகிறேன். அவர்கள் என்ன கோரினாலும் நான் உடனடியாக அட்டியில்லாமல் செய்வேன்” என்றது பூதம்.

நேரிக்கு அச்சம் தெளிந்தது. புதிய தெம்பு வந்தது. "அப்படியா? மகிழ்ச்சி, என்னைக் கிணற்றிலிருந்து வெளியேற்று’ என்றான்.

கூறியதுதான் தாமதம், அவன் வெளியே வந்துவிட்டான். அவ்வளவு விரைவில் எப்படி வெளியே வந்துவிட்டான் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால், பூதத்தினால் எத்தகைய செயலையும் செய்ய முடியும் என்பதை அவன் கண்டு கொண்டான். சூனியக்காரி தனக்குச் செய்த தீங்குக்கு, அதைக் கொண்டே தண்டனை தர அவன் எண்ணினான். ஆகவே, அவன் பூதத்துக்கு மறுபடியும் வேலை தந்தான். “நான் இருந்த கிணற்றினுள் சூனியக்காரியைப் போட்டு அடை” என்று அவன் கூறினான். இதுவும் கண்மூடி விழிக்குமுன் நடந்தேறிற்று.

சூனியக்காரி தன் தீயவழிகளால், மிகுந்த பொன் சேர்த்து வைத்திருந்தாள். நேரி அதில் வேண்டுமளவு எடுத்துக் கொண்டு, மீதியைச் சேமப்படுத்தி வைத்தான். ஏழையாகவும், துணையற்ற வனாகவும் புறப்பட்ட அவன் இப்போது பணக்காரன் ஆனான். அத்துடன் தான் நினைத்ததை எல்லாம் முடிக்கும் ஆற்றலுடைய பூதம் அவன் கைவசம் இருந்தது.

ன்

நேரிக்கு இப்போது தன் தந்தையிடம் தான் பேசியது நினைவுக்கு வந்தது. தந்தை உழைப்பை மதியாத நன்றி கெட்ட அரசன் நள்ளிக்கும், செருக்கும் ஈரமற்ற நெஞ்சமும் உடைய