உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

19

அவன் மகள் வள்ளிக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அவன் பழைய அவாவை நிறைவேற்ற இப்போது வாய்ப்பு ஏற்பட்டது.

அன்று இரவு வள்ளி மாடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். நேரியின் ஆணைப்படி பூதம் அவளை உறக்கத்திலேயே அவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அவன் அவளை எழுப்பி, தன் அறையைப் பெருக்கி மெழுகும்படி அதட்டினான். முதலில் அவள் மறுத்தாலும், அவனுடனிருந்த பூதத்தைக் கண்டு அஞ்சி வேலையைச் செய்தாள்.

அவள் செருக்கெல்லாம் பறந்தோடிற்று, இரவு முழுவதும் கடுமையாக வேலை வாங்கியபின், விடியற்காலம் அவன் பூதத்தின் மூலம் அவளை அரண்மனைக்கு அனுப்பினான்.

ஒவ்வோர் இரவும் இளவரசியின் செருக்கு இதுபோல அடக்கப்பட்டது. அவள் மனம் புழூங்கி அரசனிடம் முறை யிட்டாள். ஆனால், 'தான் சென்றது எங்கே? தன்னிடம் வேலை வாங்கித் தன்னை அவமதித்து யார்?' என்று அவளுக்குத் தெரியவில்லை.

இதை அறிய அரசன் அவளுக்கு ஒரு வழி தெரிவித்தான். "உன் பை நிறையப் பாசிப்பயறு போட்டுக் கொண்டு போ. வரும் வழியில் அதை ஒன்றொன்றாகப் போட்டுக் கொண்டு வா. அந்தத் தடமறிந்து நான் இடத்தையும் ஆளையும் கண்டுபிடிக்கிறேன்” என்றான் அவன். அவள் அவ்வாறே செய்தாள்.

ஆனால், அரசன் பேசுவதைப் பூதம் கேட்டுக் கொண்டிருந் தது. அஃது ஊர் முழுவதும் பாசிப் பயறு தூவி வைத்துவிட்டது. பாசிப்பயறு மழை பெய்திருக்கிறது என்று எல்லாரும் வியந்து பேசினர். சிறுவர் சிறுமியர் அதைப் பொறுக்கினர்.

தன் சூழ்ச்சி, பலிக்கவில்லை என்று அரசன் கண்டான். அடுத்த நாள் அவன் வள்ளியிடம் மற்றொரு சூழ்ச்சித் திறம் கூறினான். “உன் காலணியில் ஒன்றை நீ வேலை பார்க்கும் அறையில் ஒளித்து வைத்துவிட்டு வா, மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.

பூதம் இப்போது நேரிக்கு ஏற்பட இருக்கும் இடர்பற்றி அவனை எச்சரித்தது. “இந்த வேலை இனி வேண்டாம். இதில்