உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 33

கட்டாயம் ஏதேனும் சிக்கல் வந்து சேரும்" என்றது. நேரி இந்த எச்சரிக்கையைச் சட்டை பண்ணவில்லை. இளவரசி வள்ளி அன்று அவன் அறையில் வேலை பார்க்கும்போது, தன் செருப்புகளில் ஒன்றை ஒளித்து வைத்தாள்.

அடுத்த நாள் அரசன் ஒற்றர்களையும் காவலர்களையும் எங்கும் அனுப்பினான். காணாமற்போன செருப்பின் அடையாளத்தை மறு செருப்பால் காட்டி, அதைத் தேடவும் ஆணையிட்டான். நேரியின் அறையில் அஃது அகப்படவே, அவன் உடனே சிறையில் அடைக்கப்பட்டான்.

நேரியின் கெட்டகாலம், அவன் சிறைப்படும்போது நீலவிளக்கு அவன் கையிலில்லை. அவன் சிறையில் அடைபட்ட போது, அது வீட்டில் கிடந்தது. இதனால் பூதத்தின் உதவியும் அவனுக்குக் கிடைக்க வழியில்லை.

பூதத்தின் எச்சரிக்கையைப் புறக்கணித்ததற்காக அவன் வருந்தினான். என்ன செய்வது என்ற கவலையுடன் அவன் சிறைக்கூடத்தில் முன்னும் பின்னும் நடந்தான்.

அச்சமயம் அவன் பழைய விளையாட்டுத் தோழர்களுள் ஒருவன் வெளியே போய்க் கொண்டிருந்தான். நேரிக்கு ஒரு புது எண்ணம் தோன்றிற்று. அவன் சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தான். அதில் ஒரு பொன்காசு இருந்தது. அவன் உடனே தோழனைக் கூப்பிட்டான். “என் வீட்டில் ஒரு சிறு துணி மூட் இருக்கிறது.அதை என்னிடம் கொண்டு வந்து கொடு. உனக்கு ஒரு பொன் காசு தருகிறேன்” என்றான்.

தோழன் மகிழ்ச்சியுடன் மூட்டையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்குப் பொன்காசு கொடுத்தான். அவனுக்குப்பொன் காசு கிடைத்தது. நேரிக்கோ, உயிரினும் விலை மதிப்புடைய நீல விளக்கும், புகையிலைச் சுருளும் கிடைத்தன.

நேரி பூதத்தை அழைத்தான். சிறையிலிருந்து தப்ப வழி தேடும்படி கோரினான். ஆனால், பூதம் இப்போதும் அவனுக்கு நல்லறிவுரை கூறிற்று. "ஆண்டையே! சிறையிலிருந்து தப்புவதனால் மட்டும் பயன் என்ன? அரசன் தண்டனைக் காடுக்கும்வரை பொறுத்திருப்போம். நீங்கள் மட்டும் நீலவிளக்கை உடன் கொண்டு செல்க. அப்போது அதன் மூலம்