உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

21

என்னை வரவழையுங்கள். அச்சத்தால், அரசன் பணிந்து வழிக்கு வந்து விடுவான்” என்றது.

நேரி அரசன் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான். அவன் தூக்குத் தண்டனை பெறும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தூக்கு மேடையில் ஏறுமுன் நேரி ஒரு கடைசிக் கோரிக்கை கோரினான். சாகுமுன் புகைகுடிக்க இணக்கம் அளிக்க வேண்டும் என்பதே அது. அரசன் அதற்கு இணங்கினான். ஆ னால், புகைச் சுருளை நீல விளக்கின் முன் கொண்டு சென்றதும், பூதம் தோன்றிற்று அரசனையும் காவலரையும் கொல்லும்படி அவன் பூதத்துக்கு ஆணையிட்டான்.

பூதம் கொல்லப் புறப்பட்டது. காவலர் ஒருவர் இருவர் தலைகள் உருளத் தொடங்கின அச்சமயம் அரசன் மண்டியிட்டுப் பணிந்தான்.

66

“ஆற்றல் மிக்க இளைஞனே! நான் செய்ததை எல்லாம் பொறுத்துவிடு. என் மகள் வள்ளியை உனக்கு மனைவியாக அளிக்கிறேன். என் அரசையும் உனக்கே அளிக்கிறேன். என்னையும் என் ஆட்களையும் கொல்லாமல் கருணை செய்” என்றான்.

நேரி பூதத்திடம், "சரி, அரசனை மன்னித்துவிடுவோம், விட்டுவிடு; திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்” என்றான்.

நேரிக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்தேறியது. நேரி அரசனானான்.

நேரியின் தந்தை நீலனுக்குத் தனி மாளிகையும் ஏவலர் பணியாட்களும், அரசுரிமை வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன.

“திறமை வாய்ந்த பிள்ளையைப் பெற்றோம்; அதன் பயனை அடைந்தோம்” என்று நீலன் மகிழ்ந்தான்.

இளவரசி வள்ளி தன் செருக்கெல்லாம் விட்டொழிந்தாள். நேரிக்கு அவள் நல்ல மனைவியாய், நாட்டின் நல்லரசியாய் விளங்கினாள்.