உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

23

நரியின் புகழுரை கேட்டு முதலைக்கு முகம் மலர்ந்தது. அது தன் நெடும் பல்வரிசை இரண்டையும் திறந்து காட்டிச் சிரித்தது. நரிக்கு எதிர் வணக்கம் செய்து. “என்ன நரியாரே ஏது இப்பக்கம்?' கேட்டது.

என்று

“உம்மைக் கண்டுதான் இப்பக்கம் வருகிறேன். என் மனைவி சிறுகாலியின் வீடு ஆற்றின் அந்தப் பக்கம் இருக்கிறது. அங்கே அவள் தங்கை வாணகை இருக்கிறாள். அவள் நல்ல அழகி. மணப்பருவமும் அடைந்திருக்கிறாள். ஆனால், அவள் தனக்கேற்ற பல்லழகன் கிடைத்தால்தான் மணஞ்செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள். உங்களைப் பார்த்ததும், ஆற்றுக்கு அக்கரை சென்று உம்மைப் பற்றிப் பேச எண்ணினேன் என்றது செவ்வோரி.

“அப்படியா? மகிழ்ச்சி” என்றது முதலை.

""

“உமக்கு இசைவானால், பொங்கல் கழிந்தவுடன் மணநாள் வைக்கலாம்” என்றது நரி.

முதலை இசைவு தெரிவித்தது.

"நான் உம்முடனே அக்கரை வருகிறேன். அவள் இசைவு தெரிவித்ததும் வந்து உம்மை அழைத்துச் செல்கிறேன்” என்றது

செவ்வோரி.

முதலை செவ்வோரியைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு அக்கரை சேர்த்தது.

செவ்வோரி வேம்பன் காட்டில் திரிந்தது. வயிறு நிறைய வெள்ளரிக்காய் தின்றது. வேண்டும் மட்டும் வெள்ளரிக்காயைத் திரட்டிக்கொண்டிருந்தது.

பொங்கல் அணுகிற்று. அஃது ஆத்திக் காட்டுக்குச் சென்று மனைவியிடம் வெள்ளரிக்காய் மூட்டையைக் கொடுக்க

விரும்பிற்று.

ஆற்றில் இன்னும் வெள்ளம் தணியவில்லை. இன்னும் ஒரு முறை அதைக் கடக்க என்ன செய்வது? தான் ஏமாற்றிய முதலையின் கோபம் அகற்றி மற்றொருமுறை ஏமாற்ற அது தீர்மானித்தது.

ஆற்றின் இக்கரையில் சற்றுத் தொலைவில் அஃது ஒரு கோலை நட்டு வைத்தது. அதைச் சுற்றி ஒரு சிவப்புத் துணியையும் சுற்றிற்று.