உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 33

நரி பெண் பேசிவிட்டுத் திரும்பி வரும் என்று முதலை பல நாள் காத்திருந்தது. அதனால், அது மிகவும் சீற்றம் அடைந்திருந்தது. நரியைக் கண்டதும், "ஏமாற்றுக்காரனே! நீ என்ன சொல்லி விட்டுப் போனாய்? என்னை என்ன நினைத்தாய்?” என்றது.

நரி, சிரித்துக் கொண்டு, “மாப்பிள்ளை எளிதில் ஏமாற மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால், வாணகை பொங்கல் வரை காத்திருக்க மறுக்கிறாள். இப்போதே அக்கரை போய் முடிக்க வேண்டும் என்கிறாள்” என்றது.

“எங்கே அவள்” என்று முதலை கேட்டது. செவ்வோரி சிவப்புத் துணி சுற்றிய கோலைச் சுட்டிக் காட்டிற்று.

“நான் சென்று பார்க்கிறேன்” என்று முதலை அப்பக்கம் திரும்பிற்று.

நரி தடுத்தது.“அவ்வளவு படபடப்புக் கூடாது, மாப்பிள்ளை! அவள் இனி எங்கே போகப் போகிறாள்? என்னை அக்கரை சேர்த்துவிட்டால் நான் திருமண காரியங்களை விரைவு படுத்துவேன். நீர் ஆர அமர அவளுடன் பேசிக் கொண்டு, அவளை அழைத்து வரலாம்” என்றது.

புதுப்பெண்ணைப் பார்க்கும் அவாவால், முதலை விரைந்து நரியை அக்கரை கொண்டு சேர்த்துவிட்டுத் திரும்பிற்று.

அடக்க முடியாத ஆர்வத்துடன் முதலை பெண்ணின் அருகே சென்றது. அது பெண்ணல்ல, சிவப்புத் துணி சுற்றிய கோல் என்று அறிந்ததும், அது மிகவும் ஏமாற்றம் அடைந்தது. செவ்வோரி இனி அகப்பட்டால், அதைக் கொன்று பழி தீர்க்க வேண்டுமென்று அது தனக்குள் வெஞ்சினம் கூறிக் கொண்டது.

முதலை பலநாள் செவ்வோரியை எதிர்பார்த்தது. ஆனால் அது வரவில்லை. "எப்படியும் என்றேனும் அஃது ஆற்றுக்குத் தண்ணீர்குடிக்கவராமல் இருக்கமுடியாது;அப்போதுமறைந்திருந்து பிடித்துக்கொள்ளலாம்” என்று அது காத்திருந்தது.

வழக்கமாக விலங்குகள் தண்ணீர் குடிக்க வருமிடத்தில், முதலை சேற்றுக்கிடையே பதுங்கி இருந்தது. செவ்வோரி நீரில் முட்டளவு ஆழத்தில் இறங்கி நின்று தண்ணீர் குடித்தது. முதலை அச்சமயம் பார்த்துத் தண்ணீருக்குள்ளாகவே வந்து, ஒரு காலைப் பற்றிக் கொண்டது.