உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

25

முதலை பதுங்கிக் கொண்டிருந்ததென்று நரிக்குத் தெரியாது. அது காலைப் பற்றியபின்தான் செய்தி தெரிந்தது. அதை இப்போது ஏமாற்றித் தப்பப் பழைய சூழ்ச்சிகள் செல்ல மாட்டா என்று அதற்குத் தெரியும். அஃது ஒரு கண நேரத்துக்குள் ஒரு புதுச் சூழ்ச்சி கண்டுபிடித்தது. அதன்படி நடந்தது.

"முதலையாரே! நில்! நல்ல திறமைசாலிதான்! உம்மை அடிப்பதற்கென்று நான் ஒரு கம்பு கொண்டு வந்தேன். நீர் அதைப் பார்த்துக் கடித்துக் கொண்டீரே! எனக்கு ஒரு கம்பு வீணாயிற்று" என்று நரி கூறிற்று.

66

'கால் என்று நினைத்துக் கம்பைக் கவ்விவிட்டோம்!" என்று வெட்கி முதலை காலைவிட்டது.

நரி சற்று அப்பால் சென்று நின்றது. “முதலையாரே! நீர் கடித்தது உண்மையில் என் கால்தான்; கோலல்ல; காலுக்கும் கோலுக்கும் வேறுபாடு தெரியாத மட்டி என்று கண்டுதான், நான் பெண்ணென்று சொல்லி உமக்கு ஒரு கம்பை நட்டு வைத்திருந்தேன். உம் தகுதிக்கு அது சரி என்றே இப்போது தோன்றுகிறது” என்று நரி நையாண்டி கூறி நடந்தது.

முதலை வெட்கத்தாலும், சினத்தாலும் புழுங்கிற்று. மறு தடவை ஏமாறாமல் எச்சரிக்கையாயிருந்து அதைக் கொல்ல எண்ணிற்று.

று

செவ்வோரி அது முதல் தண்ணீரில் இறங்குவதேயில்லை. கரையில் பாறையருகில் நின்று கொண்டே நீர் குடிக்கும். ஆனால், ஒரு தடவை நாவால் நீரைத் துழாவிக் குடிக்கும் போது, முதலை நீருக்குள் பதுங்கியிருந்தது. அது நாவையே எட்டிப் பிடித்துக் கொண்டது.

த்தடவை எப்படித் தப்புவது என்று செவ்வோரி சிந்தித்தது. அது கலகல என்று சிரித்தது.

"முதலையாரே! உமது பற்கள் பார்க்கத்தான் வலுவுடையவை யாயிருக்கின்றன. செவ்வல்லி மலரின் ஓர் இதழை இவ்வளவு வன்மையுடன் கடிக்கிறீரே, அஃது என்ன இரும்பா?” என்றது.

தன் மடமையைக் காட்டிவிட்டதாக முதலை எண்ணி வெட்கத்துடன் பல்லின் பிடியைத் தளர்த்திவிட்டது. நரிவிரைந்து