உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

26

அப்பாத்துரையம் - 33

ஓடி அப்பால் நின்று கொண்டு, மீண்டும் நையாண்டி செய்தது. "முதலையாரே! நீர் ஒரு மடையர் என்பதை நீயே அறிந்திருக்கிறீர், ஆனால், எவ்வளவு தொலை மடையர் என்பது இன்னும் உமக்குத் தெரியாது.எங்காவது நரி செவ்வல்லி மலருடன் திரிவதுண்டா?” என்று கூறிற்று;

வெட்கமும், சினமும் முதலையைப் பாடாய்ப் படுத்தியது நீரில் மூழ்கியும் வெளிவந்தும் தன் சீற்றத்தை வெளிப்படுத்தியது, அந்த நரியின் தந்திரத்தை, அதன் நடிப்பை, புத்தி கூர்மையை, தொடர்ந்து தன்னை ஏமாற்றியதை நிதானமாய் நினைத்து வேதனையுற்றது. தானும் அதுபோலவே செயல்பட்டு அதனை வீழ்த்தியே தீரவேண்டும் என்று

செவ்வோரிக்கும் அதன் மனைவி சிறுகாலிக்கும் எப்போதும் நாவற்பழம் நாவற்பழம் என்றால், மிகவும் பிடித்தம். ஆற்றங்கரையில் சேற்றருகில் ஒரு நாவல்மரம் இருந்தது. அதில் பழம் பழுத்த சமயம் பார்த்து, முதலை அதன் வேரிடையே வேராகப் பதுங்கிக் கிடந்தது.

நரி நாவற்பழம் பறிக்க அதனருகே வந்தது. சேற்றில் முதலையின் தடம் கண்டு, அது சிறிது ஐயுற்று அப்பால் நின்றது. முதலை இன்னும் அங்கே இருக்கிறதா என்று அறிந்து மேல் செல்ல விரும்பிற்று.

"நாவல் அண்ணே? நாவல் அண்ணே! உனக்கு ஒரு நல்ல வணக்கம், பழங்கள் பக்குவமாய் விட்டனவா?” என்று அது கேட்டது.

நாவல் மரம் பேசாது என்பது நரிக்குத் தெரியும். ஆனாலும் அது பேசாதது கண்டு வியப்புற்றது போல நரி பாசாங்கு செய்தது.

66

‘என்ன அண்ணே! வழக்கமாகப் பேசுகிற நீ இன்று பேசாமல் இருக்கிறாய்? ஓகோ, இன்று நேரம் சரியாயில்லை என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்று அப்பாற் செல்ல முயன்றது.

நரி போய்விடக் கூடாதே என்ற ஆவலில், முதலை தானே மரமாகப் பாவித்துப் பேசத் தொடங்கிற்று. “நரித் தம்பி! நரித் தம்பி! போகாதே பழந்தின்று விட்டுப் போ” என்றது.