உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

66

27

'ஆகா, அப்படியா சேதி, முதலையாரே! மரம் பேசாது என்ற மதி இல்லாமல், வெளிப்பட்டுவிட்டீரே! உம் அறிவே அறிவு" என்று கூறிற்று. அன்று பழம் பறிக்காமலே அது சென்றது.

முதலை தூங்கிய சமயம் பார்த்து அது பழம் பறித்துச் சென்றது.

நரி ஆற்றருகே வரும்போது ஏமாற்றிப் பிடிப்பது அரிது என்று முதலை கண்டு கொண்டது.

நரியும் அதன் மனைவியும் வெளியே போன சமயம் பார்த்து, அது அவற்றின் வீட்டுக்குள்ளேயே புகுந்து ஒளிந்து கொண்டது. அவர்கள் உள்ளே வந்ததும் இருவரையும் பிடித்துத் தின்றுவிட வேண்டுமென்று எண்ணிற்று.

வீட்டுக்குள் வருமுன்பே, செவ்வோரி முதலையின் தடத்தைக் கண்டு ஐயுற்றது. கதவு சிறிது திறந்திருக்கக் கண்டதும் ஐயம் வலுப்பட்டது.தானும் நின்று தன் மனைவியையும் கையைப் பிடித்து நிறுத்திக் கொண்டது.

வீட்டுடன் அது பேசுவதாகப் பாவனை செய்தது.

“வணக்கம், வீட்டக்கா! எல்லாம் நலம் தானே?” என்றது. டு பேசாதது கண்டு ஐயுற்றதாக அது பாவனை செய்தது.

“என்ன வீட்டக்கா, எப்போதும் போல இன்று என்னை வரவேற்காததேன்? சூதுமதியாளர் யாராவது வீட்டினுள் வந்தார்கள் போலிருக்கிறதே!” என்றது.

வீடு பேசினாலல்லாமல் நரி போய்விடக் கூடுமென்று நினைத்து முதலை, "ஊ,ஊ, வாங்க, வாங்க!” என்றது.

66

"முதலை மாமா, முதலை மாமா! வீடு பேசாது என்று தெரியாத மட்டி மாமா! உமக்கு ஒரு நெடு நீண்ட வணக்கம். உம்முடைய தொடர்பு எனக்கு வேண்டாம். நான் போய் வருகிறேன்,” என்று அது தன் மனைவியுடன் கம்பி நீட்டிற்று.

மருதாற்றையும் ஆத்திக்காட்டையும் விட்டு, அது பாலாற்றின் கரையிலுள்ள ஆர்க்காட்டில் சென்று புதுக்குடி அமைத்துக் கொண்டது.