உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. செங்கீரை

வேடர் குடும்பமொன்றில் கீரன் என்றொரு சிறுவன் ருந்தான். சிறு வயதிலேயே அவன் தாய் தந்தையரை இழந்தான். அவன் உறவினர் எவரும் அவனைக் கவனிக்கவில்லை. அவன் தன்னந்தனியாகக் காடுகளில் அலைந்து திரிந்தான்.

அவன் உறவினர் அவனை வெறுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் வேடனாகப் பிறந்தாலும், எந்த உயிரினத்தையும் கொல்ல விரும்பவில்லை. மற்ற வேடர்கள் அம்பு எய்தி காயப் படுத்திய பறவைகளைக்கூட அவன் எடுத்து வளர்த்து, பின் பறக்கவிட்டு விடுவான்.

விலங்கு பறவைகளைக் கொல்ல விரும்பாமல் அவன் காய் கனி கிழங்குகளையும் சருகுகளையும் உண்டு, நறுநீர் பருகி நாட்கழித்தான்.

அந்தண்மை வாய்ந்த அறவோர் ஒருவர் அக்காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்தார். அவர் அன்புடன் வளர்த்த மிளா ஒன்று ஒருநாள் வேடர் வலையில் சிக்கிக் கொண்டது. கீரன் வலையை அறுத்து அதை விடுவித்தான். அதற்குப் புல்லும் நீரும் அளித்தான். அது அவனை அன்புடன் பார்த்துக் கொண்டே மெள்ள அவன் ஆடையைப் பற்றி இழுத்தது.

வாய்விடா விலங்காகிய அந்த மிளா தன்னை எங்கேயோ அழைத்துச் செல்ல விரும்புகிறது என்று அவன் குறிப்பால் அறிந்து, அதனுடன் சென்றான். அது அவனை அறவோரிடம் இட்டுச் சென்றது.

அறவோர் முகம் புன்முறுவல் பூத்தது. "அப்பனே! வாயில்லாத இந்த விலங்குகூட உன் செயலின் அருமை அறிந்து நன்றி தெரிவிக்கிறது. பார்! வேடனாயிருந்தும் இந்த இரக்க உள்ளத்தை நீ எங்கே பெற்றாய்?” என்றார்.