உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

||-

அப்பாத்துரையம் - 33

கிழவி உண்மையில் ஒரு மாயக்காரி. அவள் இளைஞனின் கவலையற்ற களிமுகத்தைக் கண்டு, அவனிடம் ஏதேனும் அருஞ் செல்வம் இருக்க வேண்டும் என்று உய்த்துணர்ந்தாள். மகளைத் தூண்டி அவனை வசப்படுத்தி, அது இன்னதென்று அறிந்து, அதைப் பெற அவள் முனைந்தாள்.

நங்கையின் பெயர் தேங்கனி. கீரன் அவள் வசப்பட்டது போலவே, அவளும் அவன் வசப்பட்டிருந்தாள். எளிதில் இருவரும் நேசமும் பாசமும் கொண்டனர். ஆயினும் தாயின் தூண்டுதலுக்கு அவள் ஆளாகி, அவனைச் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

பாசத்தில் கீரன் தன்னிலை மறந்து, தன் வரலாறு முழுவதையும் அவளிடம் சொன்னான். அத்துடன் தேங்கனிக் கேற்ற மாங்கனி என்று கூறிக் கற்பகக் கனியையும் அவளுக்குக் காடுத்தான். தாய் அதை வாங்கித் தன் தலையணையடியில் வைத்துப் பொன் சேர்த்தாள். ஆனால், இத்துடன் அவள் பேரவா நிறைவடையவில்லை. "இந்திர படாத்தையும் இதுபோல அவனிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டு, அவனைத் துரத்திவிடு" என்று அவள் மகளிடம் கூறினாள். தேங்கனி முதலில் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. தாயின் வற்புறுத்தலால். அவள் இறுதியில் இணங்கினாள். மாலை நேரம் பலகணி வழியாக இனிய தென்றல் வீசிற்று. கீரன் கிளர்ச்சியுடன் தேங்கனியிடம் பேசத் தொடங்கினான். ஆனால், அவள் அவனுடன் உரையாடாமல், வைரமாமலைப் பக்கமாகப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவன் கனிவுடன், “ஏன், என்ன கவலைப்படுகிறாய், தேங்கனி?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை, அந்த வைரமாமலைக்குச் சென்று வைரம் பொறுக்கிக் கொண்டு வரவேண்டுமென்று என் நெடுநாளைய ஆவல். ஆனால், அது மனிதர் எவராலும் ஆக முடியாத காரியம் என்பதையும் நான் அறிவேன் மலைச் சாரலுக்கும் நமக்கும் இடையேயுள்ள ஆறு எவ்வளவு ஆழமுடையது. இதை னைத்துத்தான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவள்.

நி