உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

31

உடனே அவன், இவ்வளவு தானா?" என்று கூறிய வண்ணம் தன் இந்திர படாத்தில் அவளையும் இழுத்துப் போர்த்தினான். அடுத்த கணமே இருவரும் வைரமாமலைச் சாரலில் இருந்தனர். தேங்கனி மகிழ்ச்சியுடன் அதில் வைரக் கற்கள் பொறுக்கிக் கட்டிக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் உலவினர். இறுதியில் இருவரும் ஓரிடத்தில் உட்கார்ந்தனர். தேங்கனியின் மடியில் தலைவைத்துக் கீரன் சிறிது நேரம் படுத்தான்.படுத்தவன் விரைவில் கண்ணயர்ந்தான்.

க்

தேங்கனி இத்தறுவாயைப் பயன்படுத்தினாள். அவன் தலைக்கு ஒரு கல்லை அண்டை கொடுத்து விட்டு எழுந்தாள். இந்திர படாத்தை மெள்ள அவனிடமிருந்து எடுத்து, அதன் உதவியால், தான் மட்டும் தன் மாளிகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தாள்.கீரன் மலையிலேயே கிடந்தான்.

கண் விழித்துப் பார்த்தபோது கீரன் திடுக்கிட்டான். தேங்கனியும் அவள் தாயும் தன்னிடம் கொண்ட நட்பு வஞ்சக நட்பு என்பதை உணர்ந்து. அவர்கள்மீது அவன் சீற்றங் கொண்டான். ஆனால், இப்போது அவன் சீற்றம் பயனற்றது. அவன் வைரமாமலையை விட்டு வெளியேற முடியாத நிலையில் அதில் அடைபட்டான்.

வைரமாமலையில் மனிதவாடை கிடையாது. அரக்கரே வாழ்ந்தனர். அவர்களில் சிலர் அப்பக்கம் வந்தனர். அவர்களிட மிருந்து தப்பும் வழியை ஆராய்ந்து கொண்டே, கீரன் தூங்குபவன் மாதிரி கண்ணை மூடிக் கொண்டுகிடந்தான். அரக்கருள் ஒருவன் அவனைக் கண்டு அவனை மிதித்துக் கொல்ல முயன்றான். ஆனால், அடுத்தவன் தடுத்தான். "தூங்குகிறவனைக் கொல்வானேன் அவனாக எழுந்திருந்தால்கூட இன்னும் உயரமாகத்தான் ஏறப் போகிறான். ஏதேனும் புயலிலோ முகிலிலோ சிக்கினால், அதுவே இவனை எங்காவது தூக்கி எறிந்துவிடும்!” என்று சொல்லிக் கொண்டே அரக்கன் தன் தோழனுடன் அப்பால் சென்றான்.

அரக்கர் கைப்பட்டுச் சாவதைவிட இது நல்லவழி என்று எண்ணிக் கீரன் மலை மீதேறினான்.