உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

33

"அம்மணி! நீண்ட வாழ்நாள் அளிக்கும் ஒரு செங்கீரை வகையை அரசனுக்காகப் பெருமுயற்சி செய்து தேடிக் கொண்டு வந்திருக்கிறேன். நெடுந்தொலை அலைந்ததால் களைப்பா யிருக்கிறேன். உங்கள் மாளிகையில் சிறிது தங்க இடங் கொடுக்கும் படி வேண்டுகிறேன்” என்றான்.

சூழ்ச்சியால் செங்கீரையைத் திருடும் எண்ணத்துடன் கிழவி இடமளித்தாள்.

மறுநாள் கிழவி அவனிடம் வந்து, "தம்பி! நீ அருமையாகக் கொண்டு போகும் செங்கீரையில் நாங்கள் கொஞ்சம் சமைத்து அருந்தத் தரப்படாதா?” என்று கேட்டாள்.

66

"ஆகா கட்டாயம்! என்னிடம் இரண்டு கொத்துக்கள் இருக்கின்றன. ஆகவே சிறிது தருகிறேன். சமைத்து உண்ணுங்கள்” என்று அவன் கூறினான். கழுதையுறுவாக்கும் வகையில் சிறிது எடுத்துக் கொடுத்தான்.

வேலைக்காரி அதைச் சமைக்கும் போதே சிறிது தின்றாள். அவள் கழுதையாகித் தோட்டத்தில் சென்று மறைந்து திரிந்தாள். தாய் சிறிது நேரங்கழித்துச் சமையற் களம் வந்தாள். செங்கீரை பக்குவமாய் இருப்பது கண்டு சிறிது அருந்தி, அவளும் உருவமடைந்து, தோட்டத்துக்குள் சென்று

கழுதை திரியலானாள்.

தேங்கனி கீரனுடன் இருந்து, செங்கீரை கொண்டு வரும் வேலைக்காரிக்காகக் காத்திருந்தாள். வேலைக்காரி வராததால், அவளை அழைத்துப் பார்த்தாள். பின் தாயை அழைத்தாள். இருவரும் வராமல் போகவே, எங்கே தனக்கில்லாமல் தின்று விடுகிறார்களோ என்று பார்க்க ஓடினாள்.

செங்கீரையில் கொஞ்சந்தான் மீந்திருந்தது. அவள் அதைத் தின்று கழுதையாகி மிரள மிரள விழித்தாள்.

கீரன் இப்போது மாளிகைக்கும், அதிலுள்ள எல்லாச் செல்வத்துக்கும் உரியவனானான். ஆனால், வீடெங்கும் தேடியும் கற்பகக் கனியையோ, இந்திர படாத்தையோ காண முடிய வில்லை. இப்போது அவன் அவற்றுக்காகக் கவலைப்படவில்லை. கையில் ஒரு மூட்டை தங்கத்துடன் மாளிகையைப் பூட்டிக்