உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

|-

அப்பாத்துரையம் - 33

கொண்டு மூன்று கழுதைகளையும் துரத்திக் கொண்டு அவன் வெளியேறினான்.

தொலைவிலுள்ள

ஒரு சிற்றூரில் அவன் ஒரு வண்ணானைத் தேடிப் பிடித்தான். அவன் ஏழையாதலால் கழுதை வாங்க முடியவில்லை. தானே துணி மூட்டைகளைச் சுமந்து சென்றான்.கீரன் அவனை நோக்கி, “அப்பா! நீ ஏன் இந்த மூட்டைகளைச் சுமந்து தொல்லைப்படவேண்டும்? இதோ இந்தக் கழுதைகள் எனக்கு வீட்டில் இருந்து தொல்லை தருகின்றன. நான் சொல்லுகிறபடி செய்தால். இந்த மூன்று கழுதைகளையும் நீ லவசமாகப் பெறலாம் அத்துடன் அவற்றை வைத்துக் காக்க மாதம் நூறு பொன்னும் தருவேன்” என்றான்.

பருத்தி புடைவையாய்க் காய்த்ததுபோன்ற மகிழ்ச்சி யடைந்தான் வண்ணான். “ஆகா! தாங்கள் என்ன சொன்னாலும் அதன்படி செய்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவன் வணக்கத்துடன் கேட்டான்.

கீரன் மூன்று கழுதைகளையும் தனித்தனி சுட் சுட்டிக் காட்டினான். “அன்பனே! இதோ பார் கிழக்கழுதை! இதற்கு வாரத்துக்கு ஒரு தடவை சிறிது வைக்கோல் கொடுத்தால் போதும். ஆனால், நாள் தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று தடவை தாங்கு மட்டும் அடி கொடுக்க வேண்டும். கத்துவது நின்றால் மட்டும் அடி போதும் என்று விட்டு விடலாம். இதோ இந்த நடுத்தர வயதுடைய கழுதைக்கு நாள்தோறும் ஒரு தடவை உணவு கொடு. ஆனால், வாரம் ஒரு தடவை அடி கொடு. கடைசிக் கழுதையாகிய இந்தக் குட்டிக்கு ஒவ்வொரு நாளும் மூன்று தடவை உணவு கொடு. வாரம் ஒரு நாள் மட்டும் பட்டினி போட்டுவிடு” என்றான்.

குட்டிக்கழுதைதான் தேங்கனி. இச்சமயத்தில்கூடக்கீரனுக்குத் தன்னிடம் நேசம் இருப்பதை அது அறிந்தது. அவனுக்குத் தான் கேடு செய்ய எண்ணியதை நினைத்து, அது வருந்திக் கண்ணீர் வடித்தது.

கீரன் மீண்டும் தேங்கனியின் மாளிகைக்கு வந்து சில காலம் கவலையில்லாமல் வாழ்ந்தான். ஆனால், தேங்கனியின் கண்ணீர் அவன் கனவுகளில் வந்து அவன் முன் நிழலாடிற்று. அவன் ஒருநாள் புறப்பட்டு வண்ணான் வீட்டுக்கு வந்தான்.