உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

||-

அப்பாத்துரையம் - 33

தேங்கனி கற்பகக் கனியும் இந்திர படாமும் இருக்குமிடம் தேடி, அவற்றை எடுத்து வந்தாள்.

இதோ உங்கள் பொருளை உங்களிடம் சேர்த்து விட்டேன். இனி நான் வாழ்நாள் முழுதும் உங்கள்...

கீரன் அவளைப் பேசி முடிக்க விடவில்லை.

“அவை இனி உன்னிடமே இருக்கலாம். ஏனென்றால், இனி நீயே என் மனைவி, நான் உன்னையே மணந்து கொள்ளப் போகிறேன்” என்றான்.

கீரனும் தேங்கனியும் மணம் செய்து கொண்டு இன்பமாக வாழ்ந்தனர். கற்பகக் கனி அவர்களுக்கு வேண்டிய பணம் தந்தது.

இந்திரபடாம் அவர்கள் விரும்பிய இடம் சென்று உலவவும், வைரமாமாலை சென்று வைரங்கள் எடுத்து வரவும் உதவிற்று.

இருவகைச் செங்கீரையையும் அவர்கள் தோட்டத்தில் பயிராக்கினர். தீங்கு செய்தவர்களை அவர்கள் சிலகாலம் கழுதையாக மாற்றித் தண்டித்து, மீண்டும் மனிதராக்கி மகிழ்ந்தனர்.