உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. நிலாச்செல்வி

செய்நாடு என்ற ஒரு நாட்டில் பொன்மீளி என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் கலையில் ஆர்வம் கொண்டவன். அவன் நாடும், கலைப் பண்பில் எந்நாட்டுக்கும் முன்னோடியா யிருந்தது.

செய்நாட்டின் எல்லைக்கப்பாலுள்ள ஒரு சிற்றூரில் கலைப் பண்பில் தேர்ந்த ஒரு தட்டார் குடியும், தச்சர் குடியும் இருந்தன. இருகுடியிலும் இரண்டு சிறுவரே எஞ்சியிருந்தனர்.செய்நாட்டின் கலைப்புகழ், அவர்கள் காதுக்கு எட்டிற்று. அந்நாட்டரசனைக் கண்டு தம் கலைத்திறங்காட்டிப் பரிசில் பெறும் எண்ணத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள். தத்தம் திறம் முழுவதையும் காட்டும் வேலைப்பாடுள்ள ஒவ்வொரு காணிக்கைப் பொருளுடன் சென்றார்கள்.

அரசன் பொன்மீளி அவர்களை வரவேற்றான். இருவர் கலைப் பொருள்களையும் கண்டான்.

-

தட்டார இளைஞன் காணிக்கை அழகிய ஒரு வெள்ளிமீன். அதன் கண்கள் இரண்டும் கருமாணிக்கங்கள். மீன் முற்றிலும் உயிர்த்துடிப் புடையதாகவே இருந்தது.

தச்ச இளைஞன் காணிக்கை - ஒரு மரக்குதிரை. அதன் பிடரியில் மறைந்திருந்த ஒரு திருகாணியை அழுத்தினால் அது உயிருள்ள குதிரை போல கனைத்துப் பீடு நடைபோடும்.

அரசன் இருவர் கலைத் திறங்களையும் வியந்து பாராட்டி னான். ஒவ்வொருவருக்கும் ஒரு பதினாயிரம் பொன்னைப் பரிசாக அளிக்கும்படிகட்டளையிட்டான்.

66

"என் மீனின் முழுத் திறத்தைக் கண்டு. அதன்பின் எனக்குப் பரிசளிக்கக் கோருகிறேன். அரசே! அதை ஒரு நீர்நிலையருகில் விட்டுப் பாருங்கள்” என்றான்.