உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

II.

அப்பாத்துரையம் - 33

அரண்மனை நீர்நிலையருகே மீன் விடப்பட்டது. அது கண்ணொளி வீசிக் களிப்புடன் குளத்து நீரில் மூன்று முறை சுற்றி நீந்திற்று. பின் அரசன் காலடிக்கு வணக்கம் செய்து நின்றது. அரசன் மன மகிழ்ச்சியடைந்து தட்டார இளைஞனுக்கு நூறாயிரம் பொன் அளித்துப் பெருமைப்படுத்தும்படி ஆணை தந்தான்.

தச்ச இளைஞனும் தன் குதிரையின் உண்மைத் திறமை காட்டி முழுப் பரிசு பெற விரும்பினான்.

66

“அரசே! என் குதிரையில் ஏறி அதன் ஆற்றல் காணுங்கள். அதன் பின் எனக்குப் பரிசு தரலாம். ஆயினும், என் குதிரை மீது ஏறிச் செல்பவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை தர வேண்டும். அதை யாரும் அடிக்கக் கூடாது” என்றான்.

அரசனோ இளைஞன். இந்த எச்சரிக்கை கேட்டு அவன் சீறினான்."உயிருள்ள எத்தனையோ உயர்தரக் குதிரைகள் என் கையால் அடிபடத் தவம் கிடக்கின்றன. இந்த மரக் குதிரையையா நான் அடிக்கப்படாது” என்ற கடுஞ்சினத்துடன் கூறி அதன்மீது ஏறினான்.ஏறியதும் அதைக் கைக்கொண்ட மட்டும் அடித்தான்.

ஒவ்வோர் அடிக்கும் ஓர் ஆயிர அடி உயரமாகக் குதிரை வானில் பறந்தது. அரசன் உருவம் வான முகில்களிடையே மறைந்தது. நெடுநேரம் யாவரும் ஆவலாகப் பார்த்தும் குதிரையோ, அரசனோ திரும்பி வரவில்லை.

மக்கள்

துடி

கூக்குரலிட்டனர். மதியமைச்சர்கள் துடித்தனர். படைத்தலைவர்கள் பதைபதைத்தனர். ஆனால், போன மன்னன் மீளவில்லை. காவலரும் ஏவலரும் தச்ச இளைஞனையே கடிந்து அவனைச் சிறையிலிட்டனர்.

அமைச்சர் குழு ஒன்று நாடாண்டது. மன்னனைத் தேடி உலகெங்கும் வீரரும், வேவுகாரரும் சுற்றினர்.

வானளாவிப் பறந்த குதிரை காடுகளும் மலைகளும் பாலை வனங்களும் ஆறுகளும், கடல்களும் தீவகங்களும் கடந்து சென்றது. தற்செயலாக அரசன் அதன் பிடரியிலுள்ள ஒரு முளையை அழுத்த நேர்ந்தது. உடனே குதிரை கீழ்நோக்கி இறங்கி, அரசனை ஒரு நகரின் அருகே கொண்டு சென்று இறக்கியது.