உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

39

அந்நகர் பொன்மீளிக்கு முன்பின் தெரியாத ஒன்று. அங்கே உள்ள பழக்க வழக்கங்களும் முற்றிலும் புதியவையாயிருந்தன. அங்குள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் அவன் ஓர் அறையெடுத்தான். அறை சென்றதும், உண்ட பின் ஒரு விளக்குக் கொண்டு வரும்படி ஏவலரைப் பணித்தான்.

ஏவலர் மிரள மிரள விழித்தனர்.

விடுதி முதல்வன் நேரே வந்தான். "ஐயா! உம் வேண்டுகோள் கேட்டு வியப்படைகிறோம். இந்நாட்டில் விளக்குகள் கிடையாது. விளக்குகள் கொண்டு வரவும் சட்டம் கிடையாது. இது உமக்குத் தெரியாதா?" என்றான்.

இப்போது பொன்மீளி மிரள மிரள விழித்தான்.

இஃது என்ன புதுமை? விளக்கில்லாமல் இரவில் இருட்டிலா இருப்பீர்கள்?” என்று கேட்டான்.

விடுதி முதல்வன் விளக்கம் தந்தான்.

"அன்பரீர், இந்நாட்டு இளவரசியின் முகம் முழு நிலாப் போன்றது. முழு நிலாப் போல ஒளி வீசுவது. இரவு முழுவதும் அவளே அரண்மனைக் கோபுர உச்சியிலிருந்து நகருக்கு ஒளி தருகிறாள். அதற்குப் போட்டியாக எவரும் விளக்கு ஏற்றக் கூடாது என்பது இந்நாட்டின் சட்டம். அரசர் ஆணை, விளக்கு ஏற்றினால் கடுந்தண்டனை கிடைக்கும்” என்றான்.

அப்போது இரவாகத்தான் இருந்தது. அரசன் வெளியே எட்டிப் பார்த்தான். எங்கும் நிலவாயிருந்தது. ஆனால், அது நிலாச் செல்வனின் நிலவல்ல. ஒரு கோபுர உச்சியில் நிலாச் செல்வனே போல் ஒளிமிக்க ஒரு முகம் தெரிந்தது.

அரசன் வியப்படைந்தான்.

அத்தகைய அழுகொளியுடைய இளவரசியைக் காண, அவன் உள்ளம் துடித்தது.

மறுநாள் காலை அவன் மரக்குதிரையைத் தட்டி ஏறி, கோபுர மாடியில் சென்று இறங்கினான்.

அவன் மேடையெங்கும் சுற்றிப் பார்த்தான். பின் கீழே இறங்கிப் பல கூடங்களிலும் அறைகளிலும் உலவினான். ஓர்