உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 33

அறையில் இளவரசி நிலாச் செல்வி அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் ஒளி திகழும் அழகைக் கண்டு அவன் திகைத்து நின்றான், அவன் தன்னையும் மறந்து உலகையும் மறந்து விட்டான்.

அவள் மெள்ளக் கண் திறந்தாள். எதிர்பாராத புதிய ஆள் கண்டு அவளும் திடுக்கிட்டாள். தன் தனிமையைக் கலைத்ததனால் வந்த சீற்றம். அவன் துணிச்சல் கண்டு அச்சம் ஆகிய உணர்ச்சிகள் அடுத்தடுத்து எழுந்தன. 'அவன் யார்? எப்படி இங்கே வந்தான்?' என்றறியும் ஆர்வம் இந்த உணர்ச்சிகளைத் தாண்டி மேலெழுந்தது.

"நீ யார்? இங்கே ஏன் வந்தாய்?" என்று அவள் கேட்டாள்.

நேசம் நிறைந்த அவன் உள்ளம் பேசிற்று. அவன் தன் வரலாறு கூறினான். தன் அவா ஆர்வங்களைக் கொட்டினான். அவள் மீது தான் கொண்ட நேசத்துடன் முடித்தான்.

66

'நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உன் அழகொளிக்கு அடிமையாகி விட்டேன். நீ என்ன செய்தாலும் நான் அதை இன்பமாக வரவேற்பேன்" என்றான்.

அவனிடம் பேசப் பேச அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வளவு துடிப்புடைய, நாகரிகமுடைய, வீரமுடைய இளைஞனை அவள் கண்டதே இல்லை. அவளும் அவனிடம் ஈடுபட்டாள்.

நெடுநேரம் பேசி அளவளாவியபின் மறுநாள் வருவதாகக் கூறி, அவன் குதிரையேறி மீண்டான்.

மாயக் குதிரை ஏறிவரும் அந்த மன்னிளங் கோவை எண்ணியே அவள் நாள்முழுதும் கழித்தாள். இரவில் அவள் ஒளிமுகம் அவன் இருக்குந் திசையிலேயே நெடுநேரம் நோக்கிற்று. அவனும் நகருக்கு ஒளிதந்த அந்த நிலா முகத்தைப் பார்த்துக்கொண்டே இரவைப் போக்கினான்.

நாள்தோறும் அவர்கள் அரண்மனை மாடியில் பகலில் சந்தித்துப் - பேசிப் - பொழுது போக்கினர்.

தன்னை மணந்து கொள்ளும்படி பொன்மீளி அவளை

ஒருநாள் வேண்டினான்.