உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

||-.

அப்பாத்துரையம் - 33

சிலம்பனின் செவிலித்தாய் ஒரு மாயக்காரியின் மகள். ஆகவே அவள் மாயங்களை அறிந்தவள். தன் பாதுகாப்பில் வளர்ந்த சிலம்பனை அவள் தன் புதல்வனைப் போலவே நேசித்தாள். மாயங்களை அறிந்து தடுக்கவல்ல ஆற்றல்களில் அவள் அவனைப் பயிற்றுவித்திருந்தாள். ஆகவே, சீமாட்டியின் மாயத்தையும் கள்ள ஆட்டத்தையும் சிலம்பன் ஒரு நொடியினுள் கண்டு கொண்டான். எனினும், அது தெரியாதவன் போலவே நடித்து. அவன் அவள் மாயத்துக்கு எதிர் மாயம் வழங்கினான். தன் வித்தையால் அவன் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சுண்டெலியை அவன் உண்டு பண்ணினான். கட்டத்தில் விழும் காய்களை எல்லாம் அது அவன் பக்கமே வெற்றி கிட்டும்படி புரட்டிற்று.

சீமாட்டியின் மாயத்திறம் படிப்படியாக இறங்கிற்று.அவள் வாழ்க்கையிலேயே முதல் தடவையாகத் தன் செல்வம் முழுவதும் இழந்தாள். அவள் ஏற்பாட்டின்படி, அவள் தன் வீட்டிலேயே தானும் அடிமையானாள். அவளால் அடிமையாக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களு ள் சிலம்பனின் தம்பிமாரான கங்கனும் கலிங்கனும் இருந்தனர். அவர்களுக்கு விலையேறிய பரிசுகளைக் கொடுத்தனுப்பினான்.

சீமாட்டிக்கும், அவன், அவள் செல்வத்தில் பாதி கொடுத்து, தொலையூர் சென்று நல்வாழ்வு வாழும்படி அனுப்பினான்.மீதிப் பாதிச் செல்வத்தைப் பூட்டி வைத்துவிட்டு அவன் தானும் வெளியேறினான்.

மாற்றாந் தாயிடமும் தந்தையிடமும் கூறிய முதல் உறுதி மொழி இப்போது அவனால் நிறைவேறிவிட்டது. ஆனால், தந்தையிடம் கூறிய மற்றொரு உறுதிமொழி இப்போது அவன் நினைவுக்கு வந்தது. தந்தை காண அவாவிய ஐம்பொன் மாமரத்தையும் தேடிப் பார்க்கலாம் என்று அவன் புறப்பட்டான்.

பல பகல், பல இரவு அவன் அலைந்து திரிந்தான். ஐம்பொன் மாமரத்தின் தடம் எங்கும் காணவில்லை. ஒரு நாள் முன்னிரவாகியும் தங்க இடம் அற்ற ஒரு பாலைவனத்தில் அவன் தங்க வேண்டியதாயிற்று. அதன் நடுவில் ஒரு கேணியும், கேணி