உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

II.

அப்பாத்துரையம் - 33

பாம்பு அதைக் கரையில் வைத்துவிட்டு, அதனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. வட்டம் அகலஅகல பாம்பு நெடுந்தொலை சென்றது. ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் பாம்பு மீண்டும் வட்டமிடுவது தெரிந்தது. பின் மணியை வாயில் கௌவிய வண்ணம் அது மீண்டும் கேணிக்குள் சென்றது. நள்ளிருளைப் பகலாக்கிய அந்த ஒளி மீண்டும் மறைந்தது.

காணற்கரிய இக்காட்சியைக் கண்டு, சிலம்பன் மேனி முழுவதும் சில்லிட்டது. விடிந்து நெடு நேரமாகும்வரை அவன் மரத்தை விட்டு இறங்கிவர அஞ்சினான். ஆனால், அச்சத்தினிடை யிலும் அவன் மூளை வேகமாகவே வேலை செய்தது.

அவன் அருகிலிருந்த ஒரு நகருக்கு அன்றே சென்றான். கொல்லன் ஒருவனிடம் அவன் பளுவான, வழவழப்பான விளிம்புடைய, ஒரு இரும்புச் சட்டி செய்யும்படி சொன்னான். சட்டியின் வெளிப்புறம் முழுவதும் கூறிய சிறு முட்களும், கத்தி அலகுகளும் அமைக்கும்படியும் அவன் திட்டம் செய்தான். மாலையாகுமுன் அதைக் கட்டித் தூக்கிக் கொண்டு அவன் மீண்டும் மரத்தடிக்கு வந்தான்.

அன்றிரவும் பாம்பு முன்போல வெளிவந்தது. அது ஒளி மணியை உமிழ்ந்து வைத்துவிட்டு, வட்டமிட்டு விலகிச் சென்றது. அது கண்ணுக்கு மறைந்ததும், அவன் இரும்புச் சட்டியை ஒளி மணிக்கு நேராகக் கீழே போட்டான். அது, ஒளி மணியை முற்றிலும் கவிழ்த்து நிலத்துடன் பொருந்திக் கிடந்தது. உடனே எங்கும் ஒரே இருட்டாயிற்று. மணி எந்த இடத்தில் கிடந்தது என்பதையே யாரும் கூற முடியாது.

என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் அவன் கைகள் கிளைகளைப் பற்றிக் கொண்டன. கை நகங்கள் மரப்பட்டைகளைத் துளைப்பவை போல அவற்றில் அழுந்தின. அவன் அஞ்சியது சரி என்பது விரைவில் விளங்கிற்று. பாம்பு ஒளிமணியைக் காணாமல் விரைந்து வந்து எங்கும் நிலத்தைத் தடவும் அரவம் கேட்டது. இரும்புச் சட்டியை உராயும் அரவம் அடுத்துச் செவிக்குப் புலப்பட்டது.

இருட்டில் கூடப் பாம்பின் நெடிய உருவம் வளைந்து நெளிவதை அவன் காணமுடிந்தது. அது சட்டியை வளைத்து