உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

||-

அப்பாத்துரையம் - 33

அவர்கள் அவனுடன் அன்புரையாடிக் களித்தனர். ஆனால், இறுதியில் அவர்கள் முகங்களில் கவலைக்குறி தோன்றிற்று. அது கண்ட அவன், “அருமைத் தோழியர்களே நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று கேட்டான்.

66

மனம்

"அன்பரே! உம்மோடு ஆடிப்பாடியிருப்பதில் எங்களுக்கு எவ்வளவோ மகிழ்ச்சிதான். ஆனால், இந்த இடம் பூதத்துக்கு உரியது. அது வெளியே பாம்புருவில் சென்று அகப்பட்ட விலங்குகளையோ, மனிதர்களையோ கொண்டுவந்து தின்னும், சிறு குழந்தைகளாக இருக்கும்போதே அது எங்கள் தாய் தந்தையரை இப்படித்தின்றுவிட்டது. நாங்கள் பெண்களானதால் தின்னாமல் வைத்திருக்கிறது. நாங்களும் அதன் கோணாமல் ஆடல் பாடல்களால் அதை மகிழ்வித்து வருகிறோம். நேற்று எக்காரணத்தாலோ அது இரைதேடச் சென்றபின் வரவில்லை. இன்று எப்படியும் வந்துவிடும். அது வந்தால், உங்களைத் தின்றுவிடுமே என்று எண்ணித்தான் நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று அந்த நங்கையர் அழாக் குறையாக அழுது புலம்பினார்கள்.

அவர்கள் கூறிய பூதமே, தான் கண்ட பாம்பாய் இருக்க வேண்டும் என்று சிலம்பன் உய்த்தறிந்தான். அவர்கள் கவலையை அகற்றித் தான் கண்டவை யாவும் கூறினான். முதலில் நங்கை யரால் அவன் கூறியதை நம்ப முடியவில்லை. பின் அவன் தன்னிடம் இருந்த மணியைக் காட்டினான். அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. அவர்கள் ஆடிப் பாடினார்கள், கூத்தாடினார்கள்.

ஒன்றிரண்டு நாட்களுக்குள் நங்கையருடன் அவன் மிகவும் நட்புடையவனானான். அவர்கள் தம் கதை கூறினர். அவன் தன் கதை கூறினான். தந்தை கண்ட கனவை அவன் கூறியதுமே அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து நகைத்தனர். அது கண்ட அவன், “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

"வேறொன்றுமில்லை, அன்பரே! உம் தந்தை கனவிற் கண்ட மரம் நாங்கள் தாம்” என்றார்கள்.

"நீங்கள் மரங்களா? நீங்கள் பெண்களாயிற்றே! எப்படி மரமாவீர்கள்?” என்று கேட்டான் சிலம்பன்.