உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

53

அவர்கள் மேலும் சிரித்து, “உமக்குத் துணிச்சலும் வீரமும் இருந்தால், எம்மை மரமாக்கிக் காட்டலாம்” என்றனர்.

66

அவன்.

66

‘என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்றான்

அவர்கள் ஒரு வாளை அவன் கையில் கொடுத்தனர். 'இதன் கூரிய புறத்தால் எங்கள் ஒவ்வொருவர் கழுத்தையும் வெட்டுங்கள். நாங்கள் செத்து விடுவோமோ என்று அஞ்ச வேண்டாம். தந்தை கனவில் கண்டதை நீரும் பார்க்கலாம். ஆனால், அது முடிந்தவுடன், இதே வாளின் மொட்டைப் புறத்தால் ஒவ்வொருவர் கழுத்தாக வெட்டுங்கள். நாங்கள் பழையபடி பெண்களாக ஆவோம்” என்று மூத்தவள் கூறினாள்.

அவன் அவ்வாறு செய்ய முதலில் தயங்கினான். பின் ஒருவாறு துணிந்தான்.

முதற் பெண்ணை வெட்டியதும் அவள் இரும்பாலான அடிமரமாய் நின்றாள். அவள் காலடியில் வங்கவேர் படர்ந்திருந்தது.இரண்டாவது பெண்ணை வெட்ட அவள் செம்பு வண்ணமான கிளைகளாக அடிமரத்தின் மீது படர்ந்து நின்றாள். மூன்றாவது பெண்ணை வெட்ட, அவள் வெள்ளி இலைகளாகக் கிளைகளின் மீது படிந்து தாழ்ந்தாள். நான்காவது பெண்ணை வெட்ட அவள் அழகிய பொன் வண்ணமான காய், கனிகளாகப் பூத்துக் காய்த்துக் கனிந்து தொங்கினாள்.

முதல் பொன் பழக்கொத்து நிலமளாவ வளர்ந்தவுடன், மரம் கண்ணைக் கவரும் கனிவுடன் ஆடிப் பாடத் தொடங்கிற்று. சிலம்பன் கண்ணிமையாது பார்த்துக் களித்து நின்றான்.

ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததும் அவன் வாளின் மொட்டைப் புறத்தால் பூ, கனி, காய்களை வெட்டினான். நான்காவது பெண் அவன் முன் நின்று புன்முறுவல் பூத்தாள். பின் அவன் இலைகள் மீது வெட்டினான். மூன்றாவது பெண் தன்னுருவமடைந்தாள். இப்படியே மரக்கிளைகளையும் அடிமரத்தையும் வெட்டியபோது மற்றப் பெண்களும் தத்தம் உரு அடைந்தனர்.

தந்தையின் இரண்டாவது கோரிக்கை இப்போது கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால், அவன் எவ்வளவு அந்நங்கையர்களைத் தன்னுடன் வரும்படி வேண்டினாலும்,