உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 33

அவர்கள் அவனுடன் செல்ல மறுத்தனர். ஆயினும், அவன் வற்புறுத்தலை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. அவனிடம் அவர்கள் ஒரு வெள்ளிக் குழலைக் கொடுத்தனர். “நீ எப்போது இதை ஊதினாலும் நாங்கள் வந்து இந்த ஆட்டம் ஆடிக்காட்டுவோம். போய்வா” என்று அவனுக்குப் பிரியாவிடை தந்தனுப்பினர்.

சிலம்பன் இப்போது திரும்பவும் ஏழார நாட்டுக்கு வந்தான். அரசனாகிய சேந்தன் அவனைக் காண மிகவும் மகிழ்ந்தான். ஆனால், அவன் வரமாட்டான் என்று எதிர்பார்த்துக் கங்கனும் கலிங்கனும், நாட்டு மக்களைத் துன்புறுத்தியும் பணத்தை இறைத்தும் கும்மாளமடித்துக் கொண்டு இருந்தனர். சிலம்பனைக் காணவே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆடிப்பாடும் ஐம்பொன் மாமரத்தைக் கண்டுபிடித்ததாக அவன் கூறியதே அவர்கள் எரிச்சலுக்கு அளவில்லை.

மறுநாள் அரசன் முன்னிலையில் சிலம்பன் நின்று, தன் வெள்ளிக் கொம்பை ஊதினான். நான்கு நங்கையர்களும் வந்து நின்றனர். அவன் அவர்கள் தலைகளை வெட்டினான். உடனே ஐம்பொன் மாமரம் யாவர் கண்களையும் பறிக்கும் அழகுடன் நின்றது. அதன் ஆடல் பாடலோ அவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அரசன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

அவன் தன் நாட்டில் பாதியை தன் உறுதி மொழிப்படி சிலம்பனுக்கு அளித்தான்.

ஆடிப் பாடிய ஐம்பொன் மாமரத்தை அவன் மீண்டும் வாளின் மொட்டைப் புறத்தால் வெட்டினான். அவர்கள் மீண்டும் பெண்களாயினர்.

அவன் அவர்களுக்கு அரண்மனையில் விருந்து நடத்தினான்.விருந்து முடிந்து அவர்கள் போகுமுன் அவன் மூத்த பெண்ணிடம் நயந்து பேசினான். “அழகு மிக்க நங்கையே! நீ போய்விட்டால்,, எனக்கு இந்த அரசாட்சி கூடம் பிடிக்காது. என்னை நீ மணந்து கொண்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றான்.