உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

55

அவள் முதலில் பிணங்கினாள். பின், “பூதத்திட மிருந்து நீ பெற்ற மணியினால் எனக்குத் தலைச் சுட்டி செய்து கொடுத்தால், உன்னை மணந்து கொண்டு இங்கேயே வாழ்கிறேன்” என்றாள்.

அவன் மகிழ்ந்தான். பாம்பின் மணியினால் அவன் தலைச் சுட்டி செய்து அவளுக்கு அணிந்தான். அதன் ஒளி பகலில் எல்லாருடைய கண்களையும் பறித்தது. இரவில் அது எங்கும் ஒரு சிறு கதிரவன்போல் ஒளி தந்தது.

தமக்கையை விட்டுப் பிரிய மனமில்லாமல் மற்றப் பெண்களும் சிலம்பன் அரண்மனையிலேயே தங்கினர். கங்கனும் கலிங்கனும் தம் தீய குணங்களை விட்டுவிட்டால், அவர்களுக்கு அடுத்த இரண்டு பெண்களை மணஞ்செய்து கொடுப்பதாகச் சிலம்பன் அவர்களுக்கு ஆசை காட்டினான். இது அவர்களைத் திருத்திற்று. அவர்கள் அடுத்து இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டனர்.

சிலம்பன் இல்லாத போது தம்பியர் இருவரும் செய்த கொடுமைகளைக் குடியான இளைஞன் ஒருவன் எதிர்த்துப் புரட்சி செய்திருந்தான். அவர்கள் வழி நின்ற அரசன் அவனைச் சிறைப்படுத்தியிருந்தான்.சிலம்பன் அவனை விடுவித்து அவனுக்கு நான்காம் பெண்ணை மணஞ் செய்வித்தான்.

ப்

அவ்வப்போது நான்கு பெண்களும் சிலம்பன் விருப்பத்துக்கு இணங்க ஐம்பொன் மாமரமாய் ஆடிப் பாடினர். ஆனால், சேந்தன் இறந்த பின் அவர்கள் ஐம்பொன் மாமரமாக மறுத்துவிட்டனர். அவன் வியப்புடன், "தந்தை இறந்ததற்கும் நீங்கள் மறுப்பதற்கும் என்ன தொடர்பு?” என்று கேட்டான்.

மூத்த பெண்ணாகிய சிலம்பன் மனைவி பெருமூச்சு

விட்டாள்.

66

'அன்பரே! முதலில் உங்கள் தந்தை யார் என்பதை அறியாமல்தான் இருந்தோம். அவர் கனவும் எங்களுக்குப் புரிய வில்லை. உம் அரண்மனை வந்தபின் யாவும் உணர்ந்தோம்.

"உங்கள் தந்தை எம் மாமன். எங்கள் தாய் அவர் உடன் பிறந்த நங்கை, எங்கள் நாடு தொலைவிலிருந்ததால், நாங்கள் பிறந்து வளரும்வரை எங்கள் தாய், தன் தமையன் நாட்டுக்குச்