உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

||-

அப்பாத்துரையம் - 33

செல்ல முடியவில்லை. பல அழைப்புகளுக்குப் பின் எங்கள் தாய் தந்தையருடன் நாங்கள் எங்கள் மாமனாகிய உங்கள் தந்தையைக் காண உங்கள் அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தோம். உங்கள் தந்தை எங்களை வரவேற்க வந்தார். ஆனால், அவர் வருமுன் நாங்கள் தங்கியிருந்த காட்டில் ஒரு பூதம் எங்கள் தாயையும், தந்தையையும் விழுங்கிவிட்டது.எங்களை மட்டும் இட்டுச் செல்ல விரைந்தது. ஆனால், உங்கள் தந்தை அதற்குள் வந்துவிட்டார்.

“பூதம் மாயத்தால் எங்களை ஐம்பொன் மரமாக்கி ஆடச் செய்தது. அவர் அதைப் பார்த்த வண்ணம் உறங்கினார். அவர் எழுமுன் பூதம் எங்களைக் கிணற்றடியிலுள்ள பாதாள அரண்மனைக்கு இட்டுச் சென்றது.

“பூதம் சொல்ல இவற்றை அறிந்தோம், ஆனால், எங்கள் மாமனே உங்கள் தந்தை என்பதை நாங்கள் அறியவில்லை.

ஆனால், உங்கள் தந்தை இறுதிப் படுக்கையிலிருக்கும் போது, எங்களைத் தனியாய் அழைத்து இவற்றைக் கூறினார்.”

தன் மனைவி கூறியது கேட்ட சிலம்பன் அவளை முன்னிலும் அன்பு கலந்த மகிழ்ச்சியுடன் அணைத்துக் காண்டான். அவள் தன் மனைவி மட்டுமல்ல, அவளே தன் அத்தை மகளும் ஆவாள் என்று அவன் கண்டான்.

பொன்கனிகள் போன்ற நன் மைந்தர்களைச் சிலம்பன் மனைவியும் மற்ற நங்கையரும் ஈன்று மகிழ்ந்தனர்.