உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

||-

அப்பாத்துரையம் - 33

அந்நாட்டரசன் புதல்வி எழிலரசி பெயருக்கேற்ப அழகில் சிறந்தவளாயிருந்தாள். தந்தத்தில் கடைந்தெடுத்த பாவைபோல் அவள் விளங்கினாள். நடையில் அவள் அன்னம் போன்றவள்; தோற்றத்திலும் சாயலிலும் மயில் போன்றவள்; பேச்சில் கிளி போன்றவள்; அவள் யாழ் மீட்டிப் பாடிய போது, குயில்கள் நாணின

வேங்கை நாட்டரசன் அவள் அழகையும் குணத்தையும் பற்றிக் கேள்வியுற்றான். அவளையே வெண்மணிக்கு மணம் செய்ய விரும்பினான். வெண்மணியின் தாய் தந்தையரும் இவ்வேற்பாட்டுக்கு இணங்கினர். அதன்பின் எழிலரசியை மணம் செய்யும்படி வெண்மணி வெள்ளிப் பல்லக்கில் புறப்பட்டான்.

வெண்மணியின் பல்லக்கைச் சுமந்து சென்றவர்கள் பாடிக் கொண்டே சென்றனர். அவர்கள் காடும் மலையும் கானாறும் கடந்து சென்றனர்.

ஒரு நாள் இரவு அவர்கள் பல்லக்கை ஒரு படர்ந்த ஆலமரத்தடியில் இறக்கி வைத்துவிட்டு உறங்கினர். இளவரசன் வெண்மணியும் பல்லக்கிற்குள்ளேயே உறங்கினான். காலையில் அவர்கள் பல்லக்கைத் தூக்கினர். அது பளுவற்றதாயிருந்தது. உள்ளே தேடினர். இளவரசனைக் காணவில்லை.

அவர்கள் அஞ்சினர். கவலையுற்றனர். காடு மேடெங்கும் தேடினர். இறுதியில் வேங்கை நாட்டுக்கே வந்து செய்தி அறிவித்தனர்.

இளவரசனைத் தேட வேங்கை நாட்டரசன் எங்கும் ஆளனுப்பினான். அதே சமயம் இளவரசன் காணாததை அவன் அருவா நாட்டாருக்குத் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட நாளில் எப்படியும் திருமணத்தை முடித்துவிட அவன் விரும்பினான். ஆகவே, இளவரசனுடைய வாளைப் பல்லக்கிலேற்றி அனுப்பினான். வேங்கைநாட்டு வழக்கம் இதுபோலும் என்று எண்ணி அருவா நாட்டாரும் மணமுடித்தனர்.

வெண்மணி வேந்தன் வாளுக்கு மாலையிட்ட எழிலரசி வேங்கை நாடு வந்து சேர்ந்தாள். மாமன் மாமியாராலும் மக்களாலும் அவள் புதிய அரசியாகவே நடத்தப்பட்டாள். தன்