உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 33

ஒரு நாளிரவு அவள் ஒரு மரத்தினடியில் படுத்திருந்தாள். நடந்த அலுப்பால் உடலெல்லாம் நோவுற்றது. ஆயினும் உறக்கம் வரவில்லை. அயர்ச்சி தீர அவள் கண்ணை மூடிக் கொண்டு கிடந்தாள். ஒரு பெரிய பறவை மெல்லப் பறந்து வந்து மரத்தில் பதுங்கியது போன்ற அரவம் அவள் செவிகளில் பட்டது. அப்போதும் அவளால் உடனடியாக கண்களைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் மெல்ல இமைகளை விலக்கிப் பார்த்தாள்.

மரத்தின் கிளைகளில் எதிர்பாராத ஒரு பொருள் தொங்கிக் கொண்டிருந்தது. அது கப்பல் வடிவில் அமைந்து ஒரு பெரிய கூடு. அவள் அதைக் கூர்ந்து நோக்கினாள். அது எந்தப் பறவையின் கூடாகவும் இருக்க வழியில்லையென்று கண்டாள். ஏனென்றால், அது ஒரு மனிதன் படுத்திருக்கப் போதிய அளவு பெரிது. அது கம்புக் குச்சிகளால் செய்யப் படவில்லை. பளபளப்பான ஏதோ ஒருவகை மெழுகினால் செய்யப்பட்டது போலிருந்தது.வியத்தகு முறையில் அதற்கு இரண்டு சிறகுகளும் இருந்தன.

எழிலரசியின் வியப்பார்வம் அவள் அமைதியை வென்றது. அவள் துணிச்சலுடன் மரக்கிளையில் ஏறிப் பார்த்தாள். அண்மையில் கண்ட காட்சி தொலைக்காட்சியைவிட வியப்பூட்டுவதாயிருந்தது. கப்பலுக்குள் ஒரு அழகிய பூவேலை செய்த கட்டில் இருந்தது. அதில் நிழல் போல வாடி வதங்கிய ஓர் அழகிய இளைஞன் வடிவம் கிடந்தது. அது உயிருள்ள வடிவமா, உயிரற்ற வடிவமா என்று அவளால் கூறமுடியவில்லை.

அவள் பின்னும் அருகில் சென்ற அவ்வடிவின் உடலைத் தொட்டாள். கண்கள் சற்றே திறந்தன.

66

“ஆ, உயிர் இருக்கிறது, இது ஒரு மனிதனே” என்று அவள் தனக்குள்ளாகக் கூறிக் கொண்டாள்.

“நீங்கள் யார்? எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று அவள்

கேட்டாள்.

அவன் வாயைத் திறந்தான். ஆனால், பேச முடியவில்லை.

அவள் கீழே இறங்கிச் சென்றாள். தன்னிடமிருந்த மாவைச் சிறிது பாலில் கரைத்தாள். அதைக் கொண்டு சென்று அவன் வாயில் மெள்ள மெள்ள ஊற்றினாள்.