உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

61

அவனுக்குத் தெம்பு வந்தது. அவன் வாய் திறந்து பேசினான். ஆனால், ஆண் வேடத்தில் இருக்கும் அவள் பெண் என்பதை அவன் உணரவில்லை. ஆண் என்றே கருதினான்.

"தெய்வமாக வந்து எனக்குத் தெம்பூட்டிய இளநண்பனே! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். உணவில்லாமல், சாகாமல் செத்து மடியும் எனக்கு நீ வந்து உயிர் தந்தாய்” என்றான். அவன்.

"உங்கள் பெயர் என்ன? இந்தத் தூங்கு கப்பலில் எப்படி வந்தமர்ந்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

அவன் கதை அவளைத் திடுக்கிட வைத்தது. பின் உருக்கிற்று.

66

'அன்பனே! நான் ஓர் இளவரசன். எனக்குத் திருமணமாக இருந்தது. பெண் வீட்டுக்குச் செல்லும் சமயம், என் பல்லக்கு ஒரு மரத்தடியில் இறங்கிற்று. நான் உறங்கினேன். அதன் பின் என்ன நடந்தது என்பதை இன்னும் நான் சரிவர அறியமுடியவில்லை. அன்று முதல் இந்தக் கப்பலிலேயே கிடக்கிறேன். யாராவது வந்து என்னை விடுவிக்கக்கூடும் என்று நான் தொடக்கத்தில் மனப்பால் குடித்தேன். ஆனால், ஒவ்வோர் இரவு முடிந்ததும் என்னைச் சிறைசெய்த பூதம் வருகிறது. பெரிய பறவை வடிவில் அது கப்பலைத் தூக்கிச் சென்று, பகலெல்லாம் பறந்து, இரவில் வேறு ஒரு மரத்தில் தொங்க வைக்கிறது. அந்தப்பூதம் என்னைச் சாகவிடாமல் சிறிது உணவு தருகிறது. ஆனால் கைகால் அசைக்கக்கூட அந்த உணவு தெம்பு தரவில்லை” என்றான் இளவரசன்.

அவனே தன் கணவனாயிருக்கக் கூடுமா என்று அவள் வியந்தாள்.

"உங்கள் பெயரென்ன, அன்பரே!" என்று அவள்

கேட்டாள்.

"என் பெயர் வெண்மணி, என் தந்தை தாய் வேங்கை நாட்டை ஆள்பவர்கள்” என்றான் அவன்.

அவனே தன் கணவன் என்பதை அவள் இப்போது அறிந்து கொண்டாள்.