உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

||-

அப்பாத்துரையம் - 33

அவனைக் காக்கவும், காத்து மீட்கவும் என்ன செய்வது என்று அவள் நீளச் சிந்தித்தாள்.

அவள் தன் மேலாடையைச் சிறுசிறு துண்டுகளாகக் கிழித்து முடிச்சிட்டாள். அவற்றை அவன் படுக்கையினருகே போட்டாள். “அன்பரே! பறவை உங்களைத் தூக்கிச் செல்லும் போது இந்தச் சிறு முடிச்சுகளை ஒவ்வொன்றாக வழியெல்லாம் போடுங்கள். அந்த அடையாளம் கண்டு நான் இரவு தோறும் வந்து உணவு தருகிறேன்” என்றாள்.

அந்த நல்ல இளைஞன் - இளைஞனென்றே அவளை அவன் நினைத்தான் - தனக்குதவ வந்த தெய்வம் மட்டுமல்ல; தன்னைக் காக்க வந்த கடவுள் தூதன் என்றும் அவன் எண்ணினான்.

இரவு தோறும் துணி முடிச்சுகளின் தடம் பார்த்து எழிலரசி நடந்தாள். வழியில் நகரங்களில் உணவும் ஆடையும் வாங்கினாள். இரவு தோறும் அவள் இளவரசனுக்குப் போதிய தெம்பளிக்க உணவும், கிழித்து முடிச்சிட ஆடைகளும் தந்தாள்.

தன் கணவன் பிழைக்க இப்போது வழி கண்டாயிற்று. இனி அவனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் மீண்டும் சிந்தித்தாள்.

அவள் திறமைமிக்க ஒரு கொல்லனை அழைத்தாள்; அவனிடம் முதலில் கை நிறைய பணம் தந்தாள்; அவளை யாரோ ஓர் இளைஞன் என்றே நினைத்த கொல்லன், “ஏனப்பா இது?' என்றான்.

“எனக்கு ஒரு பெரிய இரும்புப் பெட்டி வேண்டும். அது எப்போதும் திறந்தபடி இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிறுபறவை உள்ளே சென்றால் கூட, அது உடனே மூடித் தன்னைத் தானே பூட்டிக் கொள்ள வேண்டும். அதில் இத்தகைய ஒரு பொறி அமைத்துத் தா. அது முடிந்ததும் இன்னும் நிறையப் பணம் தருகிறேன். ஆனால், இவ்வளவும் இன்று மாலைக்குள் முடிய வேண்டும்” என்றாள்.

கொல்லன் மகிழ்வுடன் ஒத்துக் கொண்டான். அன்று மாலைக்குள் பெட்டி முற்றுப் பெற்றது. கொல்லனுக்கு மீண்டும் அவள் கைநிறையப் பணம் தந்தாள். அதனுடன் அவள்