உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

63

இளவரசன் தங்கிய மரத்தடிக்குச் சென்றாள். பறவைகள் ஆவலுடன் தின்னும் பலவகைப் பண்டங்களும் வாங்கிச் சென்றாள்.

அன்றிரவு, அவள் இளவரசனுக்கு உணவும், எப்போதும் போல முன்னெச்சரிக்கையாக ஆடை முடிச்சுகளும் தந்தாள். பின் அவள் கீழே இறங்கினாள். திறந்த பெட்டியினுள்ளே பறவைக்கான உணவுப் பொருள்களை நிரப்பினாள். அதன் பிறகு யாரும் தன்னைக் காணாதவாறு அதன் அருகே ஒளிந்திருந்தாள்.

விடிய ஒரு யாமத்தில் வழக்கம் போலப் பூதம் வந்தது. அது பெரிய பறவை வடிவம் எடுத்துக் கப்பலைத் தூக்க அருகே சென்றது.

அதன் கண்களில் உணவுப் பொருள்கள் நிரம்பிய பெட்டி தரிந்தது. உணவுப் பண்டங்களின் வண்ணமும், அழகும், மணமும் அதன் அலகையும் கண்களையும் துளைத்தன. அவற்றைச் சிறிது தின்னும் அவாவுடன் அது கீழே பறந்தது. பெட்டியினுள் நுழைந்தது.

பெட்டி உடனே மூடிக் கொண்டது. பொறிகள் இயங்கின. அது பூட்டு மேல் பூட்டாகப் பல பூட்டுகள் இட்டுக் கொண்டது.

வழக்கம் போலப் பறவை தன்னைத் தூக்கிச் செல்லாதது கண்டு, இளவரசன் வெண்மணி வியப்படைந்தான். பறவை பெட்டியில் அகப்பட்டுத் திணறியது அவனுக்குத் தெரியாது.

எழிலரசி இப்போது ஒரு பெரிய வண்டியும் ஆட்களும் சேகரித்தாள். பின் இளவரசன் கூண்டுக் கப்பலில் தொங்கும் மரத்தண்டை வந்தாள்.

கப்பல் அப்படியே வண்டியில் இறக்கப்பட்டது.இளவரசன் இப்போது எழுந்து உட்காரும் நிலையில் இருந்தான். ஆகவே, அவன் கப்பலிலேயே இருந்தான். இரும்புப் பெட்டி வண்டியில் ஆடாமல் தொங்கவிடப்பட்டது. முன்னும் பின்னும் ஆட்களும் வீரரும் காவல் சென்றனர். கப்பலின் அருகே ஓர் இருக்கையில் அமர்ந்து எழிலரசி இளவரசனுடன் பேசினாள்.

வெண்மணி: என் அன்பரே! என் தாய் தந்தையருக்கு அடுத்தபடி நீரே என் குலதெய்வம். ஆனால், பூதம் வராமல் நீர்