உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 33

தடுத்த வகையை என்னால் அறிய முடியவில்லையே. அதற்கு என்ன செய்தீர்?

எழிலரசி: அதைப் பின்னால் அறிவீர்கள். இப்போது நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்?

வெண்மணி: வேங்கை நாட்டுக்குப் போய் என் தாய் தந்தையரைக் கண்டு வணங்க வேண்டும்.

"உம்மை மணக்க இருந்த பெண்ணைப் பார்க்க விருப்ப மில்லையா?” என்று எழிலரசி குறும்பு நகையுடன் கேட்டாள்.

வெண்மணி: இல்லை, அது யார் என்றே எனக்குத் தெரியாது, மணமும் நடக்கவில்லையே!

எழிலரசி: அப்படியானால் உங்கள் தாய் தந்தையரைத் தவிர நீங்கள் வேறு யாரையும் நேசிக்கவில்லையா?

வெண்மணி: நேசிக்கிறேன். அவர்களுக்கு அடுத்த படியாக உம்மை நேசிக்கிறேன்.

எழிலரசி:என்னுடனேயே வாழ்வீரா?

வெண்மணி:ஓகோ!

எழிலரசி: நீர் திருமணம் செய்து கொண்டால்?

வெண்மணி: எனக்கு இனித் திருமணம் வேண்டாம். நீர் திருமணம் செய்து கொள்ளும் வரை உம்முடன் வாழ்கிறேன். அதன் பின்பும் உம் நண்பனாகவே இருப்பேன்.

எழிலரசி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள்.

அரண்மனையில் அரசனும் அரசியும் தம் மருமகனையும் மருமகளையும் ஆர்வமாக வரவேற்றனர். மக்களும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்ந்தார்கள், ஆனால், எழிலரசி இன்னும் ஆணுடை களையாததால், வெண்மணி அவளை அடையாளம் அறியவில்லை.

அரசி மகனை வாரியணைத்து, “அப்பா! உன் மனைவி நமக்கு ஒரு குலதெய்வம்தான். அவளால்தான் உன்னை உயிருடன் காணக் கிடைத்தது” என்று இன்பக் கண்ணீர் வடித்தான்.

வெண்மணி அவள் சொற்களின் பொருளறியாது விழித்தான். அதற்குள் எழிலரசி உட்சென்று தன் பெண்ணுடை