உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

89

இளைஞன் உண்மையில் மாபப்பலாம் நாட்டின் இளவரசனே! அவன் பெயரும் தற்செயலாக ‘இதாவரேன்’ என்பதாகவே இருந்தது. தன் பெயரை ஓர் அயல்நாட்டு வாணிகன் கூறி விசாரிப்பது கேட்டு அவன் திகைப்படைந்தான்; பின், 'இதாவரே'னை எனக்கு நன்றாகத் தெரியும்; என்ன வேண்டும் அவரைப்பற்றி? என்று கேட்டான்.

செம்மேனிக்கு மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. “இதாவரேன் ஓர் ஆளின் பெயரா? அப்படியானால், ஆளை எப்படி விலைக்கு வாங்குவது?” என்று விழித்தான். இளைஞன் இப்போது விளக்கமாக கேள்விகள் கேட்டான். வணிகன் மறுமொழி அவனுக்கு முழுதும் புரியாவிட்டாலும், அவன் புத்தார்வத்தைக் கிளறிற்று. “என் இளைய புதல்வி செங்கழுநீர் ‘இதாவரேன்' வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தாள். அஃது, ஓர் ஆளின் பெயராய் இருக்குமென்று நான் எண்ணவில்லை. ஒரு பொருளின் பெயராய்த்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்றான்.

ளைஞன் முகம் புன்முறுவல் பூத்தது. "அப்படியா? இப்போது புரிந்தது. அப்படி ஓர் ஆளும் உண்டு; ஒரு பொருளும் உண்டு; ஆளைப் பெறுவதுதான் கடுமையான செயல்; பொருளை நான் உங்களுக்கு எளிதில் பெற்றுத் தர முடியும். நாளைக் காலையில் நீங்கள் இதே இடத்தில் இருந்தால், நான் அதைக் கொண்டுவந்து தருகிறேன்” என்றான்.

மறுநாள்

செம்மேனி உள்ளத்திலிருந்து ஒரு பெரும் பாரம் குறைந்தது. அவன் கப்பலில் இளவரசன் இதாவரேனுக்காக காத்திருந்தான். அங்கு வந்த இதாவரேன், அவன் கையில் ஒரு மரப்பெட்டியை அளித்தான். “உங்கள் புதல்வி விரும்பிய ‘இதாவரேன்' இதற்குள் இருக்கிறது. அதைப் பெற்றுச் செல்க" என்றான். செம்மேனி, "இதற்கு என்ன விலையானாலும் கூறுக; தருகிறேன்" என்று மகிழ்வுடன் உரைத்தான். ஆனால், இளவரசன் இதாவரேன் விலைபெற மறுத்து விட்டான். “இதாவரேனுக்குரியவர் கொடுத்த பரிசாக இதை உம் புதல்விக்குத் தருக" என்றான்.