உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

|-

செம்மேனியை

அப்பாத்துரையம் - 35

மனைவி மக்களும் நண்பர்களும் ஆர்வத்துடன் வரவேற்றனர். அவன் கொண்டு வந்த பெருஞ் செல்வக்குவை கண்டு அனைவரும் வியப்பும் மகிழ்வும் கொண்டனர். அத்துடன் தத்தமக்காக வாங்கி வந்த பரிசை மனைவியும் புதல்வியரும் பெற்று அகமகிழ்வுற்றனர். 'இதாவரேன்' கொடுத்தனுப்பிய மரப்பெட்டியையும் செம்மேனி செங்கழு நீருக்குக் கொடுத்தனுப்பி வைத்தான்.

அதை, அவள் அன்புடன் பெற்றாள். ஆனால்,தான் இதாவரேன்' வேண்டுமென்றுகேட்டது பற்றி அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'இதாவரேன்' என்ன என்பதோ, இதாவரேன்' என்ற பெயருடையதாகக் கூறப்பட்ட அந்த மரப்பெட்டிக்கு என்ன பயன் என்பதோ அவளுக்கு முற்றிலும் புதிராகவே இருந்தது. அவள் மரப்பெட்டியை வாங்கித் தன் அணிகலப் பொருள்களுடன் வைத்தாள். அதன்பின் அவள் அதுபற்றி எண்ணவில்லை. அதை மறந்தாள்.

பொருள்களைத் துப்புரவு செய்யும் சமயம், அவள், ஒருநாள் அப் பெட்டியைக் காண நேர்ந்தது. அதையும் திறந்து துடைக்க எண்ணினாள். ஆனால், திறந்த போது அதில் கண்ணைக் கவரும் வனப்புடைய ஒரு விசிறி இருந்தது கண்டாள். விசிறி, விரித்துச் சுருக்கும்படியாக அமைந்திருந்தது. அதன் பிடியருகே ஒரு சிறிய முகக்கண்ணாடி பதிக்கப் பெற்றிருந்தது.

அவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, விசிறியை விரித்தாள்; அவளை அறியாமலே அவள் உதடுகள் ‘இதாவரேன்' என முனகின.

அவள்முன் ஓர் அழகிய இளைஞன் வந்து நின்றான். உண்மையில் அவனே மாபப்பாலம் இளவரசன் ‘இதாவரேன்'. விசிறி ஒரு மாய விசிறி என்பது செங்கழுநீருக்கு அதுவரை தெரியாது. அதை வீசி 'இதாவரேன்' என்று முணுமுணுத்த போது, இளவரசன் வந்து முன்னிற்பான் என்பதும் அவளுக்குத் தெரியாது. தற்செயலாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி கண்டு அவள் திடுக்கிட்டாள்.

66

‘அழகரசியே, என்னை ஏன் அழைத்தாய்?” என்று இளவரசன் இதாவரேன், குறும்பு நகையுடன் கேட்டான்.